சரி ஒரு பேச்சுக்கு பிறந்தநாளை நம் பதிவில் போடுவோம் என்று நினைத்து பதித்தால். எங்கெங்கோ இருந்து வாழ்த்துக்கள் வந்து குவிந்தது. என் கூகிள் மின்னஞ்சல் பெட்டியில் இருபத்தைந்து அஞ்சல் வந்தது இதுவே முதல் முறை.
வாழ்த்தின் உச்சம், யாரோ ஒரு ப்ரேம் என்ற நன்பர் ஒருவர் தான்சானிய நாட்டிலுருந்து வாழ்த்து SMS அனுப்பியதும், உடன் அலுவலர் ஒருவர் வேலைபாடு மிகுந்த ஒரு Cotton Shirt பரிசளித்தது.
ஆக வாழ்தியவர்களுக்கும், வாழ்த்துபவர்களுக்கும், வாழ்த்த இருப்பவர்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி.
Wednesday, April 26, 2006
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
சிவா
மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றி தொகுத்து எழுதுங்களேன்
piranda naal vazhthukal sivamurugan.
Nanum thiagarajar schoolla than padichen. Nanum madurai than.
Enakkum sourashtra than thai mozhi.
ungalai santhidathil magizhchi.
-karthic
என்னார் சார்,
தொகுத்து வைத்து எழுதுகிறேன். ஒரு நல்ல தலைப்பை கொடுத்தமைக்கு நன்றி.
கார்த்திக்,
அட நீங்களுமா நம்ம ஸ்கூல்?
எந்த வருடம்?
மதுரைல வீடு எங்கிருக்கு?
நானும் அதே ஸ்கூல் தான். எரி பந்து விளையாடறப்போ தோப்பூல குதிச்சு தேடுன அனுபவம் உண்டு எனக்கு. அதே தோப்ப பற்றி நீங்க எழுதியிருந்தது படித்தேன். அப்படியே என்னைய ஸ்கூல் வாழ்க்கைய ஞாபகப்படுத்திட்டீங்க.
மதுரையில அப்படியே அந்த திருமலை நாயகர் மகால் அந்தபுரத்துல தான் நம்ம வீடு. தங்களுக்கு வீடு எங்கோ??
-கார்த்திக்.
நான் மீனாட்சி அம்மனோட பக்கத்து வீட்டுகாரனாக்கும். ஜாடமுனி கோவில் தெருவில் வீடு. கோவிலில் இருந்து பொடி நடையா வெறும் 2 நிமிடம் நடந்த போறு(து)ம்.
ஜாடமுனி கோவில் தெருவில் வீடு//
- எந்த வீடுன்னு அடையாளம் சொல்லுங்க; பார்த்து வச்சுக்கிறேன்.
எங்கெங்கோ இருந்து வாழ்த்துக்கள் வந்து குவிந்தது.//
- இதெல்லாம் தமிழ்மணத்தில் சகஜம'ப்பா!! :-)
தருமி சார்,
ஆமா, நீங்க சொல்றது சரி.
வருகைக்கும் பின்னூட்டதிற்க்கும் நன்றி
பிறந்த நாள் வாழ்த்து(க்)கள்.
கொஞ்சம் பிந்திப்போச்சு(-:
எங்கெங்க இருந்து வந்தாலும் நியூஸியிலே இருந்து வந்தாத்தானே சிறப்பு:-)))))
//எங்கெங்க இருந்து வந்தாலும் நியூஸியிலே இருந்து வந்தாத்தானே சிறப்பு:-)))))//
அதுவும் அம்மா கிட்ட இருந்து வந்தது ரொம்ப சிறப்புனு சொல்லுங்க.
வாழ்த்துக்களுக்கு நன்றி.
Post a Comment