Saturday, April 22, 2006

100: நூறாவது பதிவும் மற்றும் நாலு பதிவும்

‘நாலு’ பதிவை நானும் பதிய வேண்டும் என்று பல நாட்கள் நினைத்து தகவல்களை இன்று பதிக்கிறேன்.

I. நான் அனைவரையும் வணங்கினாலும் ஒவ்வொரு குறிப்பிட்ட சமயத்தில் (கிழமையோ, திதியோ, தினமோ) வணங்கும் கலியுகத்தில் பிறந்து பல சாதனைகளை செய்த-செய்து வருகிற ஆன்மீக பெரியவர்கள் நால்வர்.

1. ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள்





2. ஸ்ரீ ராகவேந்திரர்




3. ஸ்ரீ ஷீரடி சாய் பாபா



4. சத்குரு ஸ்ரீ ஜக்கி வாசுதேவ்

II. என் கண்ணியில் உள்ள நான்கு தொடுப்புகள்
1. தினமலர்
2. தமிழ்மணம்
3. சைவம்.ஆர்க்
4. கூகிள் தேடல்

III. பிடித்த நான்கு பறவைகள்
1. புறா
2. கிளி
3. சிட்டுக்குருவி
4. ராஜாளி

IV. பிடித்த நான்கு வீட்டு விலங்குகள்
1. பசு
2. நாய்
3. பூனை
4. காளை

V. பிடித்த நான்கு வலை தளங்கள்
1. ஈ-பேப்பர்-தினமலர்
2. சைவம் வினாவிடை
3. தேசிகன் வீடு
4. துளசிதளம்

VI. நெஞ்சில் நிற்க்கும் நான்கு பதிவாளர்கள்
1. குமரன்
2. ஞானவெட்டியான்
3. பிரதீப்
4. தருமி

VII. சமீபத்தில் கவர்ந்த பதிவாளர்கள்
1. ச.திருமலை
2. மோகன்தாஸ்
3. சிபி
4. இராகவன்


VIII. மனம் (அக)மகிழ்ந்த நாலு தருணங்கள்
1. தில்லி வந்த நாள், (04-06-2002).
2. வேலை மாற்றிய நாள் (30-06-2003).
3. கருமுத்து கண்ணன் அவர்களின் மின்மடல் கண்ட நாள்..
4. தினமலரில் என் பதிவை கண்ட நாள் (27-3-2006).

IX. பேசக் கற்ற நான்கு மொழிகள்
1. சௌராஷ்ட்ரா
2. தமிழ்
3. ஆங்கிலம்
4. ஹிந்தி

X. எழுத கற்ற நான்கு மொழிகள்
1. சௌராஷ்ட்ரா
2. தமிழ்
3. ஆங்கிலம்
4. மலையாளம்

XI. புரிகின்ற நான்கு மொழிகள்
1. சௌராஷ்ட்ரா
2. தமிழ்
3. ஆங்கிலம்
4. புன்னகை

XII. இந்தியாவில் சுற்றுலா செல்ல விரும்பும் நான்கு இடங்கள்.
1. உதகையும், கொடைக்கானல்
2. பெங்களூர்
3. ஹைதரபாத்
4. நைனித்தால்

XIII. பார்த்து அதிசயித்த நான்கு இடங்கள்.
1. மீனாட்சி அம்மன் கோவில் - மதுரை
2. அமேர் மகால் - ஜெய்பூர்
3. சத்தர்பூர் மந்திர் - தில்லி
4. இந்தியா கேட்- தில்லி

XIV. நான் என்னுள் தேடும் நான்கு கேள்விகளின் பதில்கள்!
1. நான் யார்?
2. நான் எங்கிருந்து வந்தேன்?
3. நான் எதற்க்காக பிறந்தேன்?
4. நான் எத்தனை நாட்கள் இருப்பேன்?

XV. மறக்க முடியாத நான்கு தினங்கள்
1. ஜூன், 7 - என் அம்மாவின் பிறந்தநாள்.
2. டிசம்பர், 11 - என் அப்பாவின் பிறந்தநாள்.
(பார்தீர்களா ஒற்றுமையை. 7/6ம், 11/12ம்.)
3. பிப்ரவரி 12 - நான் யோகா கற்றுணர்ந்த நாள்.
4. ஏப்ரல் - 23 - என்னுடைய பிறந்த நாள். (அட நாளைக்கா? மறக்க முடியுமா?)

9 comments:

தருமி said...

நூறாவது பதிவுக்கு - அதுவும் இவ்வளவு விரைவில் - வாழ்த்துக்கள்

நாளை காணப் போகும் பிறந்த நாளுக்கும், அதுபோல இன்னும் பல்லாண்டுகள் காணவும் வாழ்த்துக்கள்.

புரிகின்ற 4 மொழிகளில் நாலாவது மொழி நன்றாக இருக்கிறது. - மகிழ்ச்சி.


VI. நெஞ்சில் நிற்கும் நான்கு பதிவாளர்களில் நாலாவது மட்டும் கொஞ்சம் திகட்டலாக இல்லை...?(சரி...சரி...ஒரு ஊர்ப்பாசம்தான்..இல்ல?!)

குமரன் (Kumaran) said...

Wish you many many happy returns of the day Sivamurugan.

தி. ரா. ச.(T.R.C.) said...

30/06/2006 என்பது தவறாக இருக்கலாமோ? தி ரா ச

தி. ரா. ச.(T.R.C.) said...

சதமானம் பவதி. நூறாண்டு வாழ்க நோய் நொடியில்லாமல் வாழ்க நூற்றையும்கடந்து பெரும்பேற்றையும் அடைந்து இறைப்பணிமூலமாக மறுபடி பிறக்கும் பிறப்பையும் தவிர்பீர். தி ரா ச

சிவமுருகன் said...

தருமி சார்,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

//புரிகின்ற 4 மொழிகளில் நாலாவது மொழி நன்றாக இருக்கிறது. //

அந்த ஒன்ன வச்சுக்கிட்டுதான் பொழச்சுகிட்டு இருக்கேன்.

//ஒரு ஊர்ப்பாசம்தான்..இல்ல//

இல்ல, பதிவு பாசம்.

சிவமுருகன் said...

குமரன் அண்ணா,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சிவமுருகன் said...

30/06/2006 ஆம் தவறு தான். 30/06/2003 என்பதே சரி. (அட மூனுவருஷமாக போகுதா?)

தருமி said...

பசு, பதி, பாசம் - கேள்விப்பட்டிருக்கிறேன். ம்..ம்ம்ம்.. இதுவும் நல்லா இருக்கு. நன்றி.

குமரன் (Kumaran) said...

சிவமுருகன்,

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள். 'நாலு' பதிவு போட அழைத்து இத்தனை நாளான பின்பு இப்போதாவது போட்டீர்களே?! :-)

ஒவ்வொரு நான்கும் வெகு நன்றாக இருக்கின்றன.