Thursday, April 23, 2009

கற்றதனால் ஆன...பயன்…

கற்றதனால் ஆன...பயன்…


எங்களது சம்பளம்
உங்கள் கண்களை உறுத்திற்று
வாழ்க்கை முறை கண்டு
வயிறு எரிந்திர்கள்

கலாச்சாரத்தைக் கெடுத்தோம்
என்றொரு புகாரும் உண்டு
பப்புகளில் புகுந்து உதைத்தீர்கள்
சினிமா எடுத்தீர்கள்
பத்திரிக்கைகளில் கிழித்தீர்கள்
பெண் கொடுக்க மறுத்தீர்கள்
எங்கள் சம்பாத்யத்தின்
பெரும் பகுதியை வரிஎனப் புடுங்கினீர்கள்
நங்கள் அந்நிய தேசங்களிலிருந்து
ஈட்டி வந்த பணத்தில் பாலங்கள் கட்டினீர்கள்
"இந்திய ஒளிர்கிறது"
என விளம்பரம் செய்தீர்கள்
இதோ கும்பல் கும்பலாக
நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்
சந்தோசம் தானா சகோதரர்களே ?
உங்கள் சட்டைகளைப் பற்றிக்
கேட்கிறோம்…
"கணினிமொழி கற்றதன்றி
வேறென்ன பிழை செய்தோம்?"
குறிப்பு : ஒரு க‌ணினி காத‌ல‌னின் க‌ண்ணீர்

5 comments:

ஆதவா said...

இந்த கவிதையை இதற்கு முன்னர் படித்திருக்கிறேனே!!! உங்களுடையதா???

சிவமுருகன் said...

// ஆதவா said...
இந்த கவிதையை இதற்கு முன்னர் படித்திருக்கிறேனே
//

ஆதவா,
என் க‌விதைய‌ல்ல‌ இணைய‌ம‌க்க‌ள‌து க‌விதை!

Azhagan said...

There is nothing wrong in anybody learning computers. Probably if all or most of you had learned to live with your feet firmly on the ground, if you people had learned to remember who we are, what our tradition and culture is, if you all had not tried to LIVE THE AMERICAN WAY in INDIA, probably you would not be where you are now.

ஆதவா said...

இக்கவிதை எழுதியவர் செல்வேந்திரன்... பின் குறிப்பை இப்பொழுதுதான் சேர்த்திருக்கிறீர்கள்!!!!

செல்வேந்திரனுக்கு ஒரு நன்றி போட்டுவிடுங்கள்!!

மாண்புமிகு பொதுஜனம் said...

வணக்கம்.

இன்றைய தினமலரில் வெளியாகி உள்ள ஆத்திகம் சம்பந்தப்பட்ட செய்தி மீது தங்களிடமிருந்தும் தங்களைப் போன்ற ஆத்திகப் பதிவர் பெரியோர்களிடமிருந்தும் விளக்கம் கேட்டு ஒரு பதிவு இட்டுள்ளேன்.தமிழ் மணத்தில் அதிகபட்சம் பத்து நிமிடங்களுக்கு மேல் தெரியாததாலும்,நான் சமீபத்தில் இணைந்த‌ புதுப் பதிவர் என்பதாலும் இப்பதிவு தங்களின் பார்வைக்குப் பட்டிருக்க வாய்ப்பில்லை.எனவே எனது http://tamilnaduproblems.blogspot.com பதிவைப் படித்துப்பார்த்து இச்சிறியேனுக்கு விளக்கம் அளிக்க அன்புடன் வேண்டுகிறேன்.

தங்கள் அன்புள்ள,
பொதுஜனம்.