Friday, October 30, 2009

சௌராஷ்ட்ரர் - 2 - பரசுராமர்

பாகம் - 2


பரசுராமர்


உலகம் பல பாவங்களை சுமக்க போகிறது, அவற்றை அடக்கி ஒடுக்கி ஆளவேண்டுமெனில் அதற்கு ஒரு மாபெரும் சக்தி எங்கும் வியாபித்து இருக்க வேண்டும். அப்பேற்பட்ட சக்தியை உலகில் நிலைபெற செய்ய வேண்டுமெனில் அதற்கும் ஒருவர் வேண்டும், அதை செய்யும் துணிவும், மணப்பக்குவமும் நிறைந்து இருக்க வேண்டும். அப்பேற்பட்டவர் உருவாக எவ்வளவு காலமாகும் என்று தேவர்கள் பகவானை நோக்கி கேட்கின்றனர். அதற்கு பகவான் சொல்கிறார்! அப்பேற்பட்டவர் உருவாக கால நேரம் கூடினாலே போதும் எல்லாம் தாமாக நடக்கும் என்கிறார்.

மஹேசனே பகவான் ஜமதக்னியாகவும், அன்னை பார்வதி ஸ்ரீ ரேணுகா தேவியாகவும் பிறப்பெடுத்து ஒரு அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுக்கின்றனர். இவன் அந்த சாரங்கனின் திருஅவதாரம் என்றும், தன்னுடைய ஆணையின் பேரில், இவன் தன் தாயையே சிரசேதம் செய்யகூட தயங்க மாட்டான் என்பதை தன் ஞானத்தால் உணர்ந்த பகவான் இவருக்கு ‘பரசுராமன்’ என நாமகரனம் செய்தார்.

ஏழு சிரஞ்ஜீவிகளில் (பலி, வியாஸர், ஹநுமான், விபீணஷனர், கிருபர், பரசுராமர், அச்வத்தாமா) ஒருவரான பரசுராமர், ஐயப்பனுக்காக நான்கு முக்கிய கோயில்களை உருவாக்கினார் என்று புராணங்கள் சொல்கின்றன. குழத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன் கோவில் மற்றும் சபரிமலை. இந்த நான்குமே கேரள மாநிலத்தில் அதுவும், ஒரே மலைத்தொடரில் அமைந்துள்ளது சிறப்பான ஒரு விஷயமாகும்.

மனித வாழ்க்கையை ஐந்து பருவங்களாக நம் சாஸ்திரங்கள் பிரித்துச் சொல்கின்றன. இந்த ஐந்து பருவங்களையும் விளக்கும் வகையில் ஐயப்பனின் அவதாரங்கள் இருந்திருக்கின்றன.


1. பிறந்தது முதல் பதினெட்டு வயது வரை ‘பால்ய பருவம்’. இந்தப் பருவத்தை விளக்கும் அவதாரத் தலம் - குழத்துப்புழா.


2. பத்தொன்பது முதல் முப்பத்தைந்து வயதுவரை உள்ளது ‘யெளவன (யவ்வனம்) பருவம்’. இதை விளக்கும் தலம் - ஆரியங்காவு.


3. முப்பத்தாறு முதல் ஐம்பத்தைந்து வயது வரை ‘கிரஹஸ்த பருவம்’ - இதுதான் அச்சன்கோவில்.


4. ஐம்பத்தாறு முதல் எண்பத்தைந்து வயது வரை ‘வானப்பிரஸ்தம்’ - சபரிமலை.


5. எண்பத்தாறு வயது முதல் ‘ஏகாந்த’ நிலை - காந்தமலை.


இப்படி மனித வாழ்வோடு தொடர்புடைய நிலைகளில் ஸ்வாமி ஐயப்பன் எழுந்தருளினார்.


இவ்வாறாக பரத கண்டத்தில் பல நற்காரியங்களை செய்து வந்தவர். சௌராஷ்ட்ர தேசத்தை அடைந்து தாம் கண்ணனாக வந்து கொடுத்த தொழிலை சரியாக செய்கின்றனரா? என காணவந்தார் போலும்! ப்ரோஹிதர்களை சோதிக்க வந்தார் போலும்!


சோதனை, சாதனையானதா? வேதனையானதா!?!?!?


தொடரும்...

No comments: