சித்திரை திருவிழாவிற்க்கு என்னாலும் செல்ல முடியுமா? என்று இப்போது நினைத்தாலும் கொஞ்சம் சந்தேகமாக தான் சொல்வேன் ஆனால் எப்படியோ அடம் பிடித்து இந்த வருடம் வடம்பிடித்து, அதுவும் நாலு மாசிவீதிகளையும் வலம் வந்து விட்டேன். பதிவு பதிக்க ஆரம்பித்த பிறகு இந்த வருடம் தான் முதல் முறை சித்திரை திருவிழா கண்டு எழுதுகிறேன். சித்திரை திருவிழாவில் நான் செய்த ஒரே செயல் தேர் வடம் பிடித்து இழுத்தது தான், ஏனையவற்றை எல்லாம் சற்று தள்ளி நின்றே வேடிக்கை பார்த்தேன் அவ்வள்வே!.
இந்த வருடம் வெயிலும், இல்லாமல், எந்தவித பெரிய அளவு தடையும் இல்லாமல் தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது என்னை போன்ற பலரை மிகவும் கவர்ந்திருக்கும்। முதல் தேர் நிலைக்கு வந்து கிட்டதட்ட 30 நிமிடம் வரை நேரம் எடுக்க வேண்டிய தூரம் வெறும் 5 நிமிடத்தில் வந்தது என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது, கைதட்டி ஆரவரம் செய்து வீடு . வழியெங்கும் மக்கள் கூட்டம் . இது மாசி வீதியா, மக்கள் வீதியா என்ற அளவிற்க்கு அதிக அளவு கூட்டம் தெரிந்தது.
இந்தவருடம் சித்திரை திருவிழாவிற்க்கு செல்கிறேன் என்றவுடன் நிறைய படம் பிடித்து கொண்டு வாங்க என்று பலர்(!) . எல்லோரிடமும் நான் வடம் பிடிக்க போறேன், படம் எல்லாம் கிடையாது என்றவுடம் ஏமாற்றம் அடைந்தனர். இதோ பலர் கேட்ட அந்த சித்திரை திருவிழா படங்கள், கொடியேற்றம் ஆரம்பித்து அழகர் ஆற்றில் இறங்கிய காட்சி வரை. மதுரை மண்ணின் தகவல் தொடர்பு சாதனங்களின் ஒன்றான மீடீயா தொலைகாட்சி இணையத்திலும் 400+ படங்களை வலையேற்றியுள்ளது கண்டுகளிக்க சுட்டி இதோ இங்கே. மதுரையை சார்ந்த அனைத்து தொலைகாட்சி நிலையங்களும் நேரடி ஒளிபரப்பு செய்தது மேலும் குறிப்பிடத்தக்கது।
குறிப்பு : குமரன்அண்ணா கேட்ட சொக்கரும் பிரியாவிடை அம்மனும் யானை வாகனத்தில் வரும் படம் இதில் உள்ளது, ஆனால் மௌலிஅண்ணா கேட்ட சப்தவர்ண சப்பர படம் இல்லை :(.
Monday, April 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
Photo Gallery பிரமாதம் நண்பரே!
மதுரைத் திருவிழா படங்கள் அததனையும்
கிடைக்கும் போலிருக்கிறதே!
ஒவ்வொரு படத்திலும் உள்ள அவர்களுடைய சுய விளம்பரம்தான் கண்ணைக் கட்டுகிறது!
//Photo Gallery பிரமாதம் நண்பரே!//
ஆம் ஐயா! அது ஒரு மீடீயா டீவி பங்களிப்பு.
//மதுரைத் திருவிழா படங்கள் அததனையும்
கிடைக்கும் போலிருக்கிறதே!//
ஆம் அத்தனையும் கிடைக்கிறது. காலை வேளையிலும் அய்யனும் அம்மையுன் மாசிவீதி வலம் வருவார்கள் அதையும் வலையேற்றி இருப்பதே சிறப்பம்சம்.
//ஒவ்வொரு படத்திலும் உள்ள அவர்களுடைய சுய விளம்பரம்தான் கண்ணைக் கட்டுகிறது!//
அவர்கள் செய்தது அதில் தம் பெயரை போட்டு கொண்டார்கள் அதில் தப்பில்லையே! :)
கொடுத்துவைத்தவரையா நீங்கள்....
என்னங்க இது, இம்பூட்டு படத்துல நான் கேட்டதுமட்டும் இல்லைங்கறீங்க.
சரி பார்க்கலாம்.....
பல வருடங்களுக்கு முன் நேரில் பார்த்தை மனதில் நிறுத்தி சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியது தான். :)
//கொடுத்துவைத்தவரையா நீங்கள்....//
கொடுத்துவைத்தது மதுரை மண்தான் ஒவ்வொரு ஆண்டும் அவள் காலடி படுகிறதே!
//என்னங்க இது, இம்பூட்டு படத்துல நான் கேட்டதுமட்டும் இல்லைங்கறீங்க.
சரி பார்க்கலாம்.....//
உண்மை கசக்கும்.
//பல வருடங்களுக்கு முன் நேரில் பார்த்தை மனதில் நிறுத்தி சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியது தான். :)//
இது சூப்பர், தூள்!
மௌலி அண்ணா படம் இருக்கு!
http://www.mediatvnetwork.com/Albums/Chithirai%20Thiruvizha%202008/12%20-%20Ethirsevai/slides/Media_Ethirsevai-(31).html
//மௌலி அண்ணா படம் இருக்கு!//
நன்றி சிவா...பார்த்தேன்....மிக்க மகிழ்ச்சி...
நானும் உக்காந்து ஒரு மணி நேரம் எல்லா படங்களையும் பார்த்து மகிழ்ந்தேன் சிவமுருகன். அறிமுகத்திற்கு நன்றி. மௌலி கேட்ட சப்தாவரண திருக்காட்சி இது தானா? நிறைய படம் இருக்கே சப்தாவரணத் திருக்காட்சியோட.
//நானும் உக்காந்து ஒரு மணி நேரம் எல்லா படங்களையும் பார்த்து மகிழ்ந்தேன் சிவமுருகன். அறிமுகத்திற்கு நன்றி. மௌலி கேட்ட சப்தாவரண திருக்காட்சி இது தானா? நிறைய படம் இருக்கே சப்தாவரணத் திருக்காட்சியோட.//
All the festival pictures are updated do have a look
இன்று தான ஆர அமர அத்தனை படங்களையும் பார்த்தேன் சிவா! அருமை! அருமை!
மனதார இருத்திப் பார்க்கணும்-னு நினைக்கும் போது சப்தாவரண திருக்காட்சி கிடைச்சிருச்சி பாருங்க! வாழ்க நீ மெளலி அண்ணா! :-)
சிவா சொல்லாம விட்ட தகவல்.
தேர் அருகில் இருந்து என்னைச் செல்பேசியில் அழைத்து விவரணம் அளித்தார். அடியேனுக்கு மெய் நிகர் வடம் பிடிச்ச பாக்கியம்-மகிழ்வு!
நன்றி சிவா.
கே.ஆர்.எஸ்,
//இன்று தான ஆர அமர அத்தனை படங்களையும் பார்த்தேன் சிவா! அருமை! அருமை!//
நன்றி
//மனதார இருத்திப் பார்க்கணும்-னு நினைக்கும் போது சப்தாவரண திருக்காட்சி கிடைச்சிருச்சி பாருங்க! வாழ்க நீ மெளலி அண்ணா! :-)//
நல்லோர் ஒருவர்...எல்லோருக்கும் பெய்யும் மழை!
//சிவா சொல்லாம விட்ட தகவல்.
தேர் அருகில் இருந்து என்னைச் செல்பேசியில் அழைத்து விவரணம் அளித்தார். அடியேனுக்கு மெய் நிகர் வடம் பிடிச்ச பாக்கியம்-மகிழ்வு!
நன்றி சிவா.//
மீண்டும் நன்றி. எதையும் பதித்து விட்டாலோ! எழுதி விட்டாலோ அது நினைவில் இருந்து எங்கோ சென்று விடுகிறது! என்னென்று தெரியவில்லை! (விவரித்த)அன்றைய தின செய்திகளை நினைத்து பார்க்கவேண்டும். மூன்று விதமான பூதகனங்கள் அந்த தேரில் சிற்ப்பமாக் இருந்தது! அதை பற்றி எழுத வேண்டும். No Time. :(
Post a Comment