Saturday, February 25, 2006

மாலைவேளையில்...

நேற்று ஏனோ உடம்புக்கு ஒன்றுமில்லை, என்றாலும் சீக்கிரமே அலுவலகத்தை விட்டு கிளம்பிவிட்டேன். வெளியில் வந்த எனக்கு சிறிய வாடை வரவேற்றது, நாற்றம் என்று தான் சொல்ல வேண்டும். உடனே இந்த நாற்றத்தை எங்கோ முகர்ந்த அனுபவம், தலையை குடைந்தது. முதலில் நான் எங்கு முகர்ந்தேன், இப்போது எங்கிருந்து வருகிறது என்பதை பிறகு பார்ப்போம்.

நான் இருப்பது புதுதில்லி, தெற்கு பகுதியில், 'நேரு ப்ளேஸ்' என்னும் பகுதியில் வேலை, நம்மூரில் சொல்லும் பட்டி தொட்டிகள் இங்கு ஏராளம். அப்படிபட்ட ஒரு பட்டியில் தான் நான் வசிக்கிறேன். தினமும் இப்பகுதியை கடந்து தான் செல்ல (தீர) வேண்டும்.

கடந்த மூன்றான்டில் இந்த வாடையை இப்பகுதியில் முகர்ந்த அனுபவம் இல்லை. இன்று ஏனோ, வாடை குமட்டியது, முதலில் நான் எங்கு முகர்ந்தேன் என்று நான் என் மனது 'செர்ச் இஞ்சினில்' தேடினேன்,தேடினேன். தேடினேன் வந்தது நான் 'தியாகராஜர் பள்ளியில்' படிக்கும் பொழுது ('கொஞ்சம் அழகி திரைபடத்தையோ, மால்குடி டேஸையொ ஞாபகபடுத்தி கொள்ளவும்') மாலை வேளையில் எல்லா நன்பர்களும் சிறுது நேரம் விளையாடிவிட்டு அனுப்பானடிக்கு சென்று பஸ் பிடித்து வீட்டிற்க்கு செல்வோம். சமயத்தில் தோப்புவழி எனும் குறுக்கு வழியில் செல்வோம், அப்படி செல்லும் வழியில் ஒரு ஐய்யனார் கோவிலும், கிணறும் இருக்கும், அந்த கோவிலுக்கு செல்வதற்க்காகவே இரு தென்னை மரத்தை வெட்டி போட்டிருப்பர், கீழே சாக்கடைஓடும், கர்னம் தப்பினால் மரணம் என்பது போல் கவனமாக கடக்க வேண்டும். அப்போது தான் தொடர்ந்து அனுப்பானடிக்கு செல்ல முடியும். முதன் முதலில் நாம் செல்லும் சமயத்தில் அவ்வளவாக சாக்கடை ஓடவில்லை, மழை காலங்களில் லேசாகவும், கன மழைநேரத்தில் அதிகமாவும் 'வெள்ளம்' போகும் என்று அனுப்பானடியில் வசிக்கும் கைடாக வந்த ஒரு நன்பன் சொன்னது நினைவுக்குவந்தது. அப்போது வந்த வாடை தான் நேற்று நான் முகர்ந்த வாடை, நெடி எல்லாம். நான் செல்ல வேண்டிய சப் வேயின் வாசலில் உள்ள சாக்கடை மூடியிலிருந்து ஏதோ அடைப்பின் காரணமாக கசிந்து கொன்டிருந்தது. இன்று காலை வரை யாரும் கண்டுகொள்ளாதது உபரி தகவல், நான் செல்லவேண்டிய சப் வே தப்பித்தது என் முன்னோர் செய்த புண்ணியம். 20 விணாடி கழித்து சுயநினைவடைந்து வீட்டிற்க்கு செல்ல பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தேன்.

No comments: