Monday, November 02, 2009

சௌராஷ்ட்ரர் - 3 - சௌரஷ்ட்ர தேசம்

சௌராஷ்ட்ர தேசம்

நூறு தேசத்தின் தலைநகராம் இந்த சௌராஷ்ட்ர தேசத்தில் எல்லோரும் ஓர் குலமாய் வாழ்கின்றனர்!

கண்ணன் புகழ் பாடியும் அவனளித்த தொழிலான நெசவு செய்தும் வருகின்றனர் சௌராஷ்ட்ர தேச மக்கள்.

நகரா காண்டத்தில் சொல்லபட்டுள்ளதாவது!

கோபத்திற்க்கு பேர் போன முனிவரான துர்வாச முனிவர் ஸௌராஷ்ட்ர தேசத்தில் வசிக்கும் ப்ராமணர்களிடத்தில் தனக்கு ஒரு கோவில் கட்டிக்கொள்ளும் பொருட்டு கொஞ்சம் இடம் அளிக்கும்படி கேட்டார். அதற்க்கு சரியான பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாயிருந்ததால் முனிவர் கோபம் கொண்டு உங்கள் வம்சம் க்ஷீனஸ்திதி அடையும் என துர்வாசனத்தை விடுத்தார்.

பிறிதொரு சமயம் மஹாவிஷ்ணுவின் அனுமதியினால், இந்திரன் பிதுர்காரியங்களாக செய்யப்படும் ஏகோதிஷ்டம் செய்து அதன் தானத்தை இந்த சௌராஷ்ட்ர ப்ராமணர்களுக்கு ஏகோதிஷ்டம் என்னும் தானத்தை கொடுக்கும் வேளையில், தாம் மறுபிறப்பற்றவர்கள் எனக்கூறி அந்த தானத்தை வாங்க மறுத்தனால் கோபம் கொண்ட இந்திரன் நீவீர் வறுமையில் இருக்க கடவீர் எனச் சபித்தார்.

இவ்வாறாக துர்வாச முனிவரால் சபிக்க பெற்றும், தேவராஜனால் கோபிக்க பெற்ற தேசமக்களை நோக்கி அங்கே பரசுராமர் வந்து சேர்ந்தார்!

தாம் க்ஷத்திரியர்களை ஸம்ஹாரஞ் செய்ததின் பிறகு சௌராஷ்ட்ர தேசத்தில் திரிகோத்திரபுரத்தில் பிதுர் சிராத்தம் செய்யவேண்டி சௌராஷ்ட்ர பிராமணர்களை அழைத்தார். அதற்க்கும் அவர்கள் தாம் கண்ணன் கையால் தொழில் பெற்றவர்கள் என்றும், தங்களது பாவம் இத்தலத்தில் பிதுர்காரியம் செய்வதால் தீரப்போவதில்லை எனக்கூறி அவரோட ஒத்து போக மறுத்தனர்!

ஜோதிடத்தில் தேர்ந்தவரன் மாறனத்துவர் என்பவர், பரசுராமரை உடனே தமது தேசத்தை விட்டு வெளியேறுமாறும், தென்கோடியில் இருக்கும் கண்ணனின் குழந்தை பருவக்கோவிலில் துலாபாரம் தந்தால் க்ஷத்திரியர்களை ஸம்ஹாரம் செய்த பாவம் தீரும் என்று கண்ணன் அருளால் திருவாய் மலர்ந்தார்.

தமக்கே பாப விமோக்ஷன மார்க்க தரிசனம் தர யாரிவர்கள் என்று கோபம் கொண்ட சிரஞ்சீவி பரசுராமர், எவ்வாறு எம்மை இத்தேசதை விட்டு வெளியேற சொன்னீர்களோ அவறே நீங்களும் தேசம் இழந்து கடவீர்கள் என சாபம் கொடுத்தார்.

இவ்வாறாக சாபம் பெற்றவர்கள், சதாரணமானவர்களா?

ஆம் கண்ணன் கையால் தொழில் பெற்றவர்கள்!

என்ன செய்தனர்?...

2 comments:

R-Bhaskara Narayanan said...

Parasuram Avatar is before Ramavatar. Then how can a Sourashtrian said that " We got work/job from the hand of Kannan? " Because Krishna Avatar came after Rama avatar.. Is'nt it?

சிவமுருகன் said...

திரு பாஸ்கர் அவர்களே,

நீங்கள் பார்க்கும் கோணம் சரி தான். ஆனால், பகவான் பரசுராமர் சிரஞ்ஜீவி என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன்.

பரசுராமர் குருவாயூரில் துலாபாரம் தந்து தன் பாவத்தை போக்கி கொண்டார் எனக்கூறுகிறது பாகவதம்.

எப்போதும் ஏன் நடக்காது என்று தான் யோசிப்பேன், ஏன் நடந்திருக்க கூடாது என்றும் சில சமயம் யோசிப்பேன் அவ்வாறு யோசித்து சில தரவுகளை ஆராய்ந்த சமயம் கிடைத்த சொத்து தான் இப்பதிவின் வரிகள்.

வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் மிக்க நன்றி.