Friday, July 11, 2008

என்னவளுக்கு பாமாலை!

என்னவளே!

உனக்கு கல்லூரியில்
பாமாலை வரைந்தேன்!

(உன் மீது)கிருக்கன் என்றனர்!
எழுதிய சொற்களையோ கவிதை என்றனர்!
என்னையோ கழுதை என்றனர்!

பட்டய நற்சான்றிதழ் பெற்றவுடன்!
உன்ன போற்றி ஒரு
பாமாலை வரைந்தேன்!

என் பொழப்பை பார் என்றனர்!
என்னை பொழப்பில்லாதவன் என்றனர்!

என்னை நீங்கி இருவருட காலம்!
என்னக்கு ஓய்வளித்து புத்துயுர் தந்தவளே!
உன்னை போற்றி ஒரு பாமாலை வரைந்தேன்!

ப்ராஜக்டை பார்
வேலையை முடி என்றனர்!
என்னை ப்ராஜக்ட் லீட் என்றனர்!

இப்போதும்!
உன்னை பற்றி ஒரு பாமாலை வரைகிறேன்!
நீ வருவாய் என (பகல்) கணவு கண்டு!

1 comment:

Maayaa said...

கவிதை சூப்பர்!!

மன்னிக்கவும்..ரொம்ப நாட்களுக்குப் பிறகு என் / உங்க ப்ளாக் பக்கம் வரேன். இப்போ ஆன்மீகம் மேட்டர் அப்டேட் செய்தேன்..அத சொல்லிட்டு போகலாமேன்னு வந்தேன்..கவிதைய ரசிச்சேன்