Wednesday, January 16, 2008

குடியரசு தினம்

குடியரசு தினம்,

நான் 5 குடியரசு தினங்களை பள்ளியிலும்(மழலையர் பள்ளியிலும், மேல்நிலை பள்ளியிலும்), 5 குடியரசு தினங்களை தில்லியிலும் கொண்டாடியுள்ளேன்.

1992. அது ஒரு பள்ளியில் படித்து கொண்டிருந்த சமயம், குடியரசுதின அணிவகுப்பிற்க்காக எல்லா மாணவர்களையும் பல நாட்க்கள் முன்னதாகவே பயிற்ச்சியில் ஈடுபடுத்தினர். முதலில் வகுப்புகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லாத்தாலும், ஒவ்வொரு மாலையிலும் நன்பர்கள் வீட்டிற்க்கு சென்று படிப்பதாலும் உற்சாகமாகவே இருந்தது. ஆனால் நாளாக, நாளாக பரிட்சை பயம் வந்து வாட்ட ஆரம்பிக்க என்னுடைய பீ.டீ. மாஸ்டரிடம் கேட்டே விட்டேன். கொஞ்சம் பயந்த முகம்தான் எனக்கு , ஏதோ ஒரு தைரியத்தில் அவரிடம் "சார் இங்க நல்லா டிரில் பண்ண பாஸ் ஆயிடலாமா சார்" என்று கேட்க ஒரு விபரீதம் நடந்ததை பிறகே உணர்ந்தேன். பரசுராமர் கோபத்திற்க்கு பேர் போன அவதாரம், லக்ஷ்மணனும் கோபத்திற்க்கும் பேர்போன ஒரு அவதாரம் இவ்விருவரின் பேரும் தாங்கிய அந்த பீ.டீ. மாஸ்டர்கள், முதலில் அடக்க முயன்றவர்கள் (நான் அந்த வயதிலேயே கொஞ்சம் நன்றாக யோகாவை செய்வேன் அதனால் நான் பரசு சாரின் 'பெட்') பிறகு புரியவைத்தார்கள். எப்படியோ சரி என்று மறுபடியும் ஆரம்பித்தோம் இதே கேள்வி பலரும் கேட்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து அந்த குடியரசு தின அணிவகுப்பை முடித்தனர்.

அடுத்த வருடம் எங்கள் அணிவகுப்பு நடந்ததா? அடுத்த பதிவில்...

2 comments:

cheena (சீனா) said...

பள்ளிக்கூட இளமைக் கால நினைவுக்ளை மலரும் நினைவுகளாக நினைத்து ரசித்து பதிவிடுவது ஒரு மகிழ்ச்சியே !! - நானும் பிறந்ததிலிருந்து இன்று வரை மலரும் நினைவுகளை பதிவிட்டு வருகிறேன்.
http://cheenakay.blogspot.com

சிவமுருகன் said...

சீனா,

அது தானா வருது, ஏன்னா இப்போ வீட்டுக்கு ரொம்ப பக்கத்துல இருக்கேன்ல அதுதான்... ஹி...ஹி...