மீனாட்சி அம்மன் கோவிலருகில் பல மண்டபங்களும் பல கோவில்களும் இருந்து வருகின்றன. அதில் மிக பழமையும் பெருமையும் வாய்ந்தது புது மண்டபம். இந்த மண்டபம் மயன-மனையடி சாஸ்த்திரபடி கட்டப்பட்ட மண்டபங்களுள் ஒரு முக்கிய மண்டபம். இதில் இருபதுக்கும் மேற்ப்பட்ட இறைவனின் திருஉருவ சிலைகள் இருக்கின்றன.
இம்மண்டபம் கட்டிமுடிக்கப்பட்டவுடன் சிலைகளின் கண்கள் சாஸ்த்திர சம்பிரதாய முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. அப்போது இம்மண்டபம் தேவலோகத்தை நோக்கி எழும்ப ஆரம்பித்தது, என்ன செய்வது என்று விரைந்து கணித்த வல்லுநர்கள் உடனடியாக ஒரு குதிரையின் கால் குளம்பில் ஒரு உளியால் தட்ட அம்மண்டபம் அங்கேயே நின்று விட்டது. இன்றும் சிலைகள் கொண்ட மண்டபம் சற்று உயர்ந்தும், மற்ற வெளிசுற்றுகள் தாழ்ந்தும் இருப்பதை காணலாம்.
ஆவணி மாத திருவிழாவில் அம்மையும் அப்பனும் இம்மண்டபத்தில் எழுந்தருளி இம்மண்டபத்திற்க்கு மேலும் பெருமை சேர்க்கின்றனர்.
திருமலை நாயக்க மன்னரின் மேற்பார்வையில் கட்டபட்ட மண்டபங்களுள் முதன்மை வாய்ந்த மண்டபம், முதல் முதலில் மாசி திருவிழா சித்திரை திருவிழாவுடன் இணைக்கப்பட்ட போது இம்மண்டபத்தில் திருக்கல்யண விருந்து நடந்ததாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
தற்சமயம் இம்மண்டபம் சிறுசிறு தையல் கலைஞர்களும், சிறு வியாபாரிகளின் தொழில் கூட்டுமைப்பாகவும் இருந்து வருகிறது. மேலும் திருவிழாகாலங்களில் குறிப்பிட்ட நேரங்களில் இக்கடைகள் அடைத்து இறைவாழிபாடு செய்கின்றனர்.
புத்தக கடைகளுக்கும், பட்டு நூல்கள், பல தினுசுகளில் வரும் புதிய மற்றும் பழைய வகை உடை அலங்கார பொருட்களுக்கும் பேர் போன புதுமண்டபம் கடைகள் இன்றும் காலத்தால் அழியாத இடமாக உள்ளது.
இது நிகழ்வுகள் பதிவின் ஐம்பதாவது பதிவு.
Thursday, July 13, 2006
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
புது மண்டபம்னாலே நமக்குப் புத்தகக் கடைகள்தாங்க நினைவுக்கு வரும். நானும் பல தடவை போயிருக்கேன். ஆனால் இந்த சிலைகளைப் பாக்குற நோக்கு இருந்ததில்லைங்கறதை வெக்கத்தோடு ஒத்துக்கிறேன்.
இப்ப நினைச்சாலும் மீனாச்சியம்மன் கோயிலும் அதைச் சுத்தி இருக்குற மண்டபங்களும் எத்தனை எத்தனையோ சரித்திர உண்மைகளையும் கதைகளையும் நமக்குச் சொல்லுது, அதையெல்லாம் கவனிக்காம இருக்கோமேன்னு வருத்தந்தேன்.
அத்தோட நீங்க கேட்ட ஆறு பத்தியும் எழுதியிருக்கேங்க. பாத்துச் சொல்லுங்க !
http://pradeepkt.blogspot.com/2006/07/blog-post_13.html
பிரதீப்,
நீங்க தான் நான் அழைத்த அறுவரில் முதல் ஆளாக பதித்தீர்கள்.
நன்றி.
வாங்க எழுத்து பிழை,
திருத்திவிட்டேன்.
நன்றி.
எனக்கும் புதுமண்டபம் என்றவுடன் பள்ளி திறக்கையில் சென்ற புத்தகக் கடைகளே ஞாபகம் வந்தது. ஆனால் நீங்கள் கோவிலின் உள்ளே மீனாக்ஷி திருக்கல்யாணத்துடன் இருக்கும் மண்டபத்தைச் சொல்கிறிர்களா? அந்தப் படம் கூட வெளியிட்டிருக்கிறீர்களே ! நாங்கள் சொல்வது அம்மன் சன்னதி எதிரில் கோவிலுக்கு வெளியே இருக்கும்.
மணியன் சார்,
//எனக்கும் புதுமண்டபம் என்றவுடன் பள்ளி திறக்கையில் சென்ற புத்தகக் கடைகளே ஞாபகம் வந்தது.//
சரியாக சொன்னீர்கள்.
//ஆனால் நீங்கள் கோவிலின் உள்ளே மீனாக்ஷி திருக்கல்யாணத்துடன் இருக்கும் மண்டபத்தைச் சொல்கிறிர்களா?//
இதில் உள்ள எல்லா படங்களும் புதுமண்டப படம் தான், திருக்கல்யாண மண்டப படமல்ல
//அந்தப் படம் கூட வெளியிட்டிருக்கிறீர்களே ! நாங்கள் சொல்வது அம்மன் சன்னதி எதிரில் கோவிலுக்கு வெளியே இருக்கும்.//
இதில் உள்ள எல்லா படங்களும் அம்மன் சன்னதி எதிரில் கோவிலுக்கு வெளியே இருக்கும் புதுமண்டபபடங்களே.
ஒருவேளை திருக்கல்யாண மூர்த்தி சிலையை கண்டு இப்படி எண்ணிவிட்டீர்களோ, அதுவும் புதுமண்டபத்தில் தான் உள்ளது.
மதுரைப் புது மண்டபம். நல்லா நினைவிருக்கு. எத்தனை கடைகள் இருக்கு. அதுக்குள்ள இப்பிடிப் போயி அப்பிடி வந்தாலே ஒரு சந்தோசம். அத்தனை கடைகளையும் வேடிக்க பாத்துக்கிட்டுப் போனா ஜம்முன்னு ஒருக்கும்.
wonderful!! sivamurukan!
(sorry no tamil now)
wonderful!! sivamurukan!
(sorry no tamil now)
wonderful!! sivamurukan!
(sorry no tamil now)
Post a Comment