Saturday, July 22, 2006

இன்று சனிப்பிரதோஷம்

இன்று சனிப்பிரதோஷம்




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

என்ற திருவள்ளுவரும்,

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

என்றும்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

என்று தெய்வத்தின் பெருமையை கூறி தாமும் கடவுளை வணங்குபவர்களுள் ஒருவராக சொல்லியுள்ளார். கடவுள் என்றால் யார்? அவர் எங்குள்ளார்?, என்று எவரேனும் கேட்டு விடக்கூடாது என்பதால் பலவிதமான் கோவில்கள், பலவிதமான தெய்வங்கள் என்று ஆங்காங்கே கோயில் கொண்டு அருள் செய்து வருகின்றனர். மேலும் நடமாடும் தெய்வங்களாக அவர்கள் பெற்றோர்கள் என்ற ஸ்தானத்தில் இருந்து வருகின்றனர். தெய்வங்கள் எங்கே இருந்தாலும், எப்படி தொழப்பட்டாலும் சஹஸ்ரநாமத்தில் சொல்லியுள்ளபடி

“கரோமி யத் யத் சகலம் ப்ரஹஸ்மை நாரயணயாதி சமர்பயாமி”

என்று எல்லா நைவேத்தியங்களும், ஆஹுதி பொருட்களும் பரபிரம்மமான நாராயணனையே சென்று அடைகிறது.

ஈசனும் எப்போதும் “ராமா” என்ற துவிஅக்ஷரங்களை (இரண்டெழுத்தை) ஜபித்தபடி தியனிப்பவர் என்று சிவபுராணம் சொல்கிறது. ஈசனை ஜபிப்பவர்கள் கைலாச வாசம் பெற்று ஈசனிடம் “ராமா” நாம உபதேசம் பெருகின்றனர் என்று சித்தர்களும், ரிஷி முனிகளும் சொல்லியுள்ளனர்.

நாராயணனின் பாத கமலத்தில் இருந்த கங்கையை தன் தலை மேல் சூடியதால் ஈசனை கங்கைகொண்டான், என்று பெயர் பெறசெய்தவர் எட்டெழுத்துகுரிய பெருமான் நாராயணன், தன்னை வணங்குபவர்களை நாராயணன் வைகுண்ட வாசமளித்து அவர்களுக்கு “சிவ” ஈரெழுத்து மந்திர தீக்ஷை அளித்து ஆட்கொள்கிறார் என்று “தேவி பாகவதம்” சொல்கிறது. இப்படி ஒருவரை ஒருவர் மதித்து வாழவேண்டும் என்று இவர்கள் இருவருமே உதாரணமாக இருந்து வருவது யுக யுகமாக தொடர்கிறது.

மேலும் ஒருவரை ஒருவர் தொண்டு செய்து வாழ்ந்த திருவிளையாடல்களும் அரங்கேறியுள்ளன, ஈசனின் தொண்டனாக, ஈசனே கண்கண்ட தெய்வம் என்பதை உலகம் மூழூவதும் அறிவிக்க நாராயணன் எடுத்த அவதாரம், ஜமதக்னி-ரேணுகா தேவிக்கு பிறந்த “பரசுராமர்”. சிவதொண்டே இவரது தாரக மந்திரமாக இருந்து வந்துள்ளது. குமரி முதல் இமயம் வரை அவர் ஸ்தாபித்த கோவில்கள் ஏராளம். தான் பிறந்தது முதல் எல்லா நாட்களும் பகவான் ஈசனே தெய்வம் என்று சொல்லி வந்துள்ளார், அதற்க்கு உதாரணமாகவும் இருந்து வந்து தன் பெற்றோரையே சிவ-பார்வதியாக எண்ணி வணங்கி வந்தார், தன் தந்தையின் உத்தரவிற்க்கு பணிந்து, தன் பரசு (கோடாலி) என்ற ஆயுதத்தால் தன்னை பெற்ற தாயின்சிரத்தையே கொய்தவர் பின் அதே செயலால் இன்று உலகம் முழூவதும் மழையின் தெய்வமாக கருதப்படும் “மாரியை” தன் திருவிளையாடலால் உலகிற்க்கு தந்தவர் ஜமதக்னி என்ற அந்த சங்கரனார்.

அதே போல் சிவன் நாராயனின் பக்தனாக, தொண்டனாக, நாராயணனே தெய்வம் என்று புகழ்பாடும் அவதாரமாக பிறந்தார் அவரை அடுத்த பதிவில்.

8 comments:

Hariharan # 03985177737685368452 said...

சனிப்ப்ரதோஷத்தன்று நந்தியை தங்களால் தரிசிக்கும் பேறு கிடைத்தது.

நன்றிகள்.

ஹரிஹரன்
www.harimakesh.blogspot.com

சிவமுருகன் said...

வாங்க ஹரிஹரன்,

எல்லாம் அவன் செயல்.

மணியன் said...

ஹர ஹர சங்கரா!

சிவமுருகன் said...

ஜெய ஜெய சங்கர

தி. ரா. ச.(T.R.C.) said...

நன்றி சிவமுருகன் நந்தி தரிசனத்திற்கு.சிங்கையில் பிரதோஷ பலன் அருளிச்செய்த்தற்கு.

குமரன் (Kumaran) said...

தொடர் நன்றாக இருக்கிறது சிவமுருகன்.

சிவமுருகன் said...

நன்றி தி.ரா.சா.

சிவமுருகன் said...

நன்றி அண்ணா.