Monday, July 10, 2006

201: Baraha - பரஹா எழுத்துரு செயலி


Baraha - பரஹா எழுத்துரு செயலி.

இவ்வளவு வேகமாக பல பதிவுகளை இட காரணங்களை ஆராய்ந்த போது அதை பட்டியலிட்டேன்,

1. அங்கையர்கன்னியின் அருள்
2. வேங்கடவனின் திருவருள்
3. ஊக்கமளித்த உங்களை போன்றவர்கள், மேலும் பல நன்பர்கள்.
4. பரஹாவின் எழுத்துருச்செயலி (அதிலும் எனக்கு பிடித்தது Ver 6.0)
5. கூகுள் ஆண்டவர் (சில கடின சொற்களுக்கு இவர் தான் எனக்கு வழிகாட்டி)
6. படங்கள் அளித்த நன்பர்கள் பலர்.

பரஹாவின் எழுத்துரு செயலி பற்றி இப்பதிவில் இடுகிறேன்.

பரஹாவில் பல வசதிகள் அதிலும் ஒரு அதிசயம் என்னவென்றால் அதை பலருக்கு நாமே பரிந்துரைக்கலாம், பயன்படுத்த சொல்லி அனுப்பலாம். copy rights எல்லாம் அவர்களுக்கே என்றாலும் அதை பிறருக்கு அனுப்பலாம்.

மற்ற செயலிகளை விட இதில் என்ன விஷேசம் என்று கேட்டால் இந்த செயலியை நிறுவும் போதே மற்ற இந்திய மொழிகளான

1. கன்னடம்
2. மலையாளம்
3. தெலுங்கு
4. மராட்டி
5. குஜராத்தி
6. பஞ்சாபி
7. பெங்காலி
8. சமஸ்கிருதம்

அதுவும் தாமாக நிறுவிகொண்டு விடும், நமக்கு தேவையான சமயத்தில்
தேவையான மொழியை தேர்வு செய்து தட்டச்சு செய்யலாம். மேலும் தமிழ் மொழியின் எண்கள் இதில் ஒரு சிறப்பம்சமாகும், தமிழில் வரும் வடமொழிகாளான ஸ,ஷ,ஸ்ரீ,ஜ போன்ற எழுத்துகளும் இதில் இடம் பெற்றுள்ளது,

மேலும் இதில் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்ய பெரிதும் பயன்படுகிறது, உதாரணமாக நேற்றைய குருவை தியானிப்பாய் என்ற பதிவிலும், சௌராஷ்ட்ரா திருக்குறள் பதிவிலும், பாடலையும், குறள்களையும் மொழிமாற்றம்(Translit) செய்ய இந்த பரஹா மொழி மற்று மென்பொருளே (Baraha Conversion Utility) பெரிதும் உதவிவருகிறாது.

பரஹா மென்பொருளை தயரித்த மென்பொருள் குழுவிற்க்கும், அதை அங்கீகாரம் செய்த பரஹா நிறுவனத்திற்க்கும் என் மனமார்ந்த நன்றியை இப்பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல மொழிகளை தம் மென்பொருளில் இணைத்து, ஒரு முழூ இந்திய மொழி செயலியாக மாற, என்னை நன்றாக படைத்த அந்த "ஏழுமலை வாசனான" வேங்கடவனையும், "அவர்தம் தங்கையான" அங்கயர்கன்னியை வேண்டியும், வணங்கியும் மகிழ்கிறேன்.

7 comments:

ஜயராமன் said...

ஐயா,

தங்கள் பதிவு பார்த்து நான் சந்தோஷப்பட்டேன்.

நான் ஈ-கலப்பையை உபயோகிக்கிறேன். அது தமிழுக்கு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

ஆனால், அதில் தமிழ் எழுத்தில் ஒன்று இல்லை. அது - ஶ 'ச' கிரந்த எழுத்து மூலம். யூனிகோட் நம்பர் U+0BB6. இது தமிழில் சமீபத்தில் ஓரிரு வருஷம் முன்னால் சேர்க்கப்பட்டது. இது இன்னும் அமையப்படவில்லை.

தங்களின் பராகாவில் இந்த எழுத்து இருக்கிறதா என்று விளக்கமுடியுமா?

அங்கும் இல்லையென்றால், இந்த குறைக்கு என்ன செய்வது என்று தாங்கள் அறிவுரை சொல்ல முடியுமா?

நன்றி

சிவமுருகன் said...

ஜெயராமன் சார்,
நீங்கள் சொல்லும் கிரந்த எழுத்து மிகவும் அரிதாக பயன்படும் ஒரு எழுத்து. அதை பரகாவில் யுனிகொட் கூட்டில் இல்லை என்றே எண்ணுகிறேன்.

தெரிந்தவர்களிடம் கேட்டுப்பார்க்கிறேன்.

நன்றி.

ஜயராமன் said...

தங்கள் பதிலுக்கும் முயற்சிக்கும் மிக்க நன்றி

G.Ragavan said...

பரஹா என்றால் கன்னடச் சொல். வரைவது என்ற தமிழ்ச்சொல்லின் அடி வந்த கன்னடச் சொல். வரையப் படுவது (அல்லது எழுதப்படுவது) பரஹா.

ஹனே பரஹா என்பார்கள். அதாவது ஹனே என்றால் நெற்றி அல்லது முன்னந்தலை. தலை எழுத்து என்பதன் இணைச் சொல்.

இது முதலில் கன்னடத்திற்கான எழுத்துருவாக மட்டும் இருந்தது. இப்பொழுது எழுத்துச் செயலியாகவும் முன்னேறியிருப்பது நன்று. முயற்சி செய்து பார்க்கிறேன்.

pathykv said...

prEvu Sivamurugan,
E baraha amre vatthaak serko avaiyaa?
pathy.

சிவமுருகன் said...

ஆமாம் இராகவன்,

சில மாதமாக இதை பயபடுத்துகிறேன் நன்றாக உள்ளது. பல மொழி வசதி என்னை கவர்ந்தது.

சில நாட்களுக்குமுன் துளசி அம்மா கூட "ங்" பற்றி கேட்டாங்க. இதில் உள்ளதாக சொல்லவும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.

நன்றி.

சிவமுருகன் said...

ப்ரேவ் கொய பதி தானுக்,

அம்ர வத்தாம் அங்குன் உனிகோட் செர்க்கொ அவ்ரனி, தெக ப்கல்சொது அமி பரக ஜோள் ஸங்கி அம்ர பாஷா மெள்ள ஜுடன்னோ.

இந்தி வத்தாம் லிக்கத்தோ ஸெர்க்க அவரஸ்.

துர அவ்னிக் ஜுகு விஸ்வாஸ் களல்லரஸ்.