கடந்த இருவருடங்களாக மதுரை சென்ற சமயம் செய்ய முடியாத ஒன்று இம்முறை முடிந்தது.
ஒவ்வொருதடவை ஒரு முறையாவது மீனாட்சி அம்மன் கோவில் திருபள்ளியெழுச்சி, மற்றும் பள்ளியறை பூஜையையும் மேலும் கூடல் அழகரின் விஸ்வரூப தரிசனத்தையும் தரிசிக்க வேண்டும் என்று எண்ணுவேன், இந்த முறை அது நடந்தேறியது.
ஒவ்வொருதடவை ஒரு முறையாவது மீனாட்சி அம்மன் கோவில் திருபள்ளியெழுச்சி, மற்றும் பள்ளியறை பூஜையையும் மேலும் கூடல் அழகரின் விஸ்வரூப தரிசனத்தையும் தரிசிக்க வேண்டும் என்று எண்ணுவேன், இந்த முறை அது நடந்தேறியது.
அதிகாலை நான்கு மணிக்கே வீட்டில் ஒவ்வொருவராக எழுந்து விடுவர். காலை, மாலை 4.30-5.00 மணிவரை அம்மன் சந்நிதிக்கு எதிரில் உள்ள நகரா மண்டபத்தில் நகரா வாத்தியங்கள் வாசிப்பர்.
நாதஸ்வரம், தண்டோரா, இன்னபிற மங்கள வாத்தியங்களை இசைக்க கேட்பதை (அதுவும் வீட்டிலிருந்தே) கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்வேன்.
இந்த முறை அந்த இசையையும் கேட்க முடிந்தது.
தொடர்ந்து கோவிலுக்கு சென்று அதிகாலை திருப்பள்ளியெழுச்சி பார்த்து, முதல் தீபாராதனை தரிசித்து கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்கு நடையை கட்டினேன்.
கோவிலுக்கு செல்பவர்கள் காலணியனியாமல், வீட்டிலிருந்து கோவிலுக்கு நடந்து சொல்ல வேண்டும் என்று பலர் சொல்ல கேட்டுள்ளேன். அதுவும் இந்த முறை தான் நடந்தது. செப்டம்பர் 2007 கூடல் அழகரை தரிசித்தேன், அதன் பிறகு ஏதோ தடை தாமதம் செல்ல முடியாத சூழ்நிலையானது.
இப்போது கூடல் அழகர் கோவிலில் அதிகாலை எல்லோரும் ஒரே நோக்கோடு ஸ்ரீதேவி, பூதேவி சமேத, வரதராஜ பெருமாள் எப்போது காட்சி கொடுப்பார் என்று காத்திருந்தனர். கோவில் பசு வந்துகொண்டிருந்தது. அடடா, இன்னும் சிறிது நேரத்தில் விஸ்வரூப தரிசனம்.
கோவில் குருக்கள் அப்பசுவிற்க்கு அலங்காரம் செய்தார், துளசி மாலை அணிவித்தார். அனைவரது தவிப்பையும் போக்கும் அந்த தாமோதரன் இதோ காட்சியளிக்கின்றார். அழகர்கோவில் தோசை மிகவும் பிரபலம் அதே போல் இக்கோவிலிலும் காலை பிரசாதமாக தரப்படும் தோசை மிகவும் பிரபலம். சஹஸ்ரநாம பாராயணம் ஆராம்பமாகிவிட்டது. இக்கோவிலில் மூன்று குழுக்கள் பாராயாணம் செய்வர். தோசை வினியோகம் நடந்தது. இப்போது 12 சுற்று சுற்றலாம் என்று ஆரம்பித்தேன்.
முதல் சுற்றில் பொற்றாமரை குளக்கரையில் ஒரு காண்ணாடி சட்டம் தெரிந்தது. என்ன அது?....
தொடரும்...
3 comments:
இப்போதான் இந்த பதிவினைப் பார்த்தேன்...
நீங்களாவது 2 வருஷம் முன்னாடி திருப்பள்ளியெழுச்சி-அர்த்தஜாம பூஜைகள் பார்த்தீங்க...எனக்கு 15 வருடங்களுக்கும் முன்னதாகப் பார்த்தது. டிசம்பர்ல போறேன் 1 வார விடுப்பில், அருளிருந்தால் கிடைக்கும்.
மௌலி அண்ணா,
//இப்போதான் இந்த பதிவினைப் பார்த்தேன்...//
சூப்பர். இந்த பதிவு என்னமோ யார்கண்லையும் படலையோன்னு ஒரு டவுட் இருந்திச்சு :-).
//நீங்களாவது 2 வருஷம் முன்னாடி திருப்பள்ளியெழுச்சி-அர்த்தஜாம பூஜைகள் பார்த்தீங்க...எனக்கு 15 வருடங்களுக்கும் முன்னதாகப் பார்த்தது.//
அவசியமாக் இந்த முறை பாருங்க! மார்கழியில் 8.40 மணிக்கெல்லாம் பள்ளியறைபூஜை நடக்கும். சீக்கிரமே பார்த்தி வந்துடலாம்!
//டிசம்பர்ல போறேன் 1 வார விடுப்பில், அருளிருந்தால் கிடைக்கும்.//
அப்பிடியே திருகல்யாண மண்டபத்தில் நடன நிகழ்ச்சியும் பார்க்கலாம்! எப்போது வைக்கிறார்களோ இல்லையோ! தெரியவில்லை.
ஏதேனும் ஒரு நாட்டியபள்ளியிலிருந்து பலர் தங்களால் இயண்ற கடவுளர்களை நமக்கு காட்டுவர்.
கடந்த 2002-ல் நிகழ்ந்த ஒரு நடன திருவிழாவில் நான் பார்த்து என் சிந்தையில் இன்னும் நர்த்தன கணபதியும், சிவசக்தி நடனமும், பாஞ்சாலி சபதத்தில் வரும் கிருஷ்ணரும் இருக்கின்றனர்.
இத்தோடு தருமர், சகுனி, கர்ணன் என்று யாரையும் விட்டு வைப்பதில்லை. :-).
முடிந்தால் அவசியம் பாருங்கள்!
வெளி ஊர்கலில் இருந்து வந்து பார்த்து விடுகிறேர்கள் மதுரை இல் இருக்கும் எங்களுக்கு போக முடியவில்லை கூடல் அழகர் பற்றி எனக்கு தெரிந்த சில...
Pls visit http://maduraikoodalalagar.co.cc/
and give feedback. Thank You
Post a Comment