Friday, February 16, 2007

சிவராத்திரி

முக்கண்ணன், அபிஷேக பிரியனுக்கு இன்று ஒரு நாள் அவன் மக்களுக்கு மோக்ஷதிற்க்கு வழிகாட்டும் நாள்.

இதை செய்! அதை செய்! என்ற பகாவன் தன்னை வணங்கு என்று ஒரு போதும் சொல்வதில்லை, சாதாரணமாக அப்படி ஒரு முதலாளி தன் வேலைக்காரனை வணங்கு என்று சொல்லாமல், வேலையே வாங்குவது போல், அதே போல் மேலும் நன்பனிடத்தில் மரியாதை இருந்தாலும் அவனை வணங்காமல் எப்படி நாமும் நம்மை பற்றி சொல்லிக்கொள்வது போல் பகவானும் அதையே செய்கிறார்.

அப்பேற்பட்ட மோக்ஷத்தை அள்ளி தர அழைக்கிறார் வாருங்கள் நாமும் செல்வோம் ஈசனின் சன்னிதி நோக்கி.

ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஷித ஷொபித லிங்கம்
ஜன்ம ஜதுக்க வினாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

தேவ முனி ப்ரவரார்சித லிங்கம்
காமதஹன கருணகார லிங்கம்
ராவண தர்ப வினாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

ஸர்வ ஸுகன்தி ஸுலெபித லிங்கம்
புத்தி விவர்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

கனக மஹாமனி பூஷீத லிங்கம்
பனிபதி வேஷ்டித சொபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ வினாஸன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லெபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசொபித லிங்கம்
ஸன்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

தெவகணார்சித ஸெவித லிங்கம்
பாவையர் பக்திபிரெவ ச லிங்கம்
தினகர கோடி பிரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வெஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர வினாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

லிங்காஷ்டகம் இதம் புண்யம்
யஹ படெத் சிவ சந்நிதௌ
சிவலொகம் ஆவாப்னொதி
சிவேன ஸஹ மோததே

என்று சுந்தரேஸ்வரரை வணங்கி

(மூலவரும், ஆருத்ரா தரிசனிதின் போது உலாவரும் உற்சவரரும்)
(பாரம்பரிய தோற்றம்)


வெள்ளியம்பல நடராஜர் சன்னிதி முழுவதும் வெள்ளியால்வேயப்பட்ட பின்

"வெள்ளியம்பல நடராஜருக்கு சந்தன அலங்காரமிட்டு ஆரத்தி"

கணிவு கொடுக்கும் கண்ணதாசன் பாடல்.

ஒன்றானவன், உருவில் இரண்டானவன்,
உருவான செந்தமிழில் மூன்றானவன்,
நன்றான வேதத்தில் நான்கானவன்,
நமச்சிவாய என் ஐந்தானவன்,

இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்

பத்தானவன், நெஞ்சில் பற்றானவன்
பன்னிருகை வேலவனைப் பெற்றானவன்
முற்றாதவன் மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்

ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்
அவையொன்று தானென்று சொன்னானவன்
தான்பாதி உமைபாதி கொண்டானவன்
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்

காற்றானவன்...ஒளியானவன்...
நீரானவன்... நெருப்பானவன்...
நேற்றாகி இன்றாகி எனறைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன்... அன்பின்
ஒளியாகி நின்றானவன்!”

நம பார்வதே பதயே!
ஹர ஹர மஹா தேவா!

தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!

8 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிவ முருகா!
என்ன?சிவராத்திரி தரிசனமா?
நல்ல திவ்வியமான தில்லைநடராசன் படங்கள்!
நலமாக உள்ளீர்களா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிவ முருகா!
என்ன?சிவராத்திரி தரிசனமா?
நல்ல திவ்வியமான தில்லைநடராசன் படங்கள்!
நலமாக உள்ளீர்களா?

சிவமுருகன் said...

ஐயா,

இவர் பொன்னம்பலத்தானல்ல, இவர் வெள்ளியம்பலத்தான். மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில்.

//நலமாக உள்ளீர்களா? //

மிக்க நலமையா, தங்களன்பிற்க்கு மிக்க நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மீனாச்சியம்மன் கோவிலில் இப்படி ஒரு சந்நிதி உண்டா? தெரியாது.
நலமாக இருப்பதியிட்டுச் சந்தோசம்.

கால்கரி சிவா said...

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

அரவிந்தன் நீலகண்டன் said...

மகாசிவராத்திரி வாழ்த்துக்கள்

david santos said...

Hello!
This work is very good.
Taste very of the Indian culture.
Tank you

குமரன் (Kumaran) said...

மதுரைக்குச் சென்று சுவாமி சன்னிதியில் பாண்டியனுக்காக கால் மாறி ஆடிய வெள்ளியம்பலத்தானைத் தரிசித்த பேறு கிடைத்தது சிவமுருகன். மிக்க நன்றி.