Saturday, November 04, 2006

இலவசம் – தேன்கூடு போட்டிக்காக

இறைவா நீ கொடுத்த பல இலவசங்களுக்காக மிக்க நன்றி.

அத்தோடு இறைவா இனி மேலும் சில பொருட்களோடு சில உணர்வையும் இலவசமாய் தரும்படி என் கோரிக்கை.


படுக்கையோடு தூக்கத்தை
ஆயுதங்களோடு வீரத்தை
புத்தகத்தோடு சிறந்த கல்வியை

உணவோடு பசியை
நீரோடு தாகத்தை
வீட்டோடு சந்தோஷத்தை
மருந்தோடு நீண்ட ஆயுளை
கேளிக்கையோடு வஞ்சமில்லா சிரிப்பை


அன்றுதான் இலவசம் என்ற வாசகத்தின் உண்மை விளங்கும்.
உன் மேல் அனைவருக்கும் என்றும் மாறாத உற்சாகம் தங்கும்.

8 comments:

ENNAR said...

பாலிருக்கும் பசியிருக்காத
பஞ்சணையிருக்கம் தூக்கமிருக்காது
இது தான் இயற்கை

சிவமுருகன் said...

என்னார் ஐயா,
சரியாக சொன்னீர்கள். அதனால் தான் அதை இறைவனிடம் இலவசமாக கேட்டேன்.

சிவமுருகன்

வெட்டிப்பயல் said...

நல்ல கோரிக்கைகள் சிவமுருகன்.

வாழ்த்துக்கள்.

G.Ragavan said...

// ENNAR said...
பாலிருக்கும் பசியிருக்காத
பஞ்சணையிருக்கம் தூக்கமிருக்காது
இது தான் இயற்கை //


// சிவமுருகன் said...
என்னார் ஐயா,
சரியாக சொன்னீர்கள். அதனால் தான் அதை இறைவனிடம் இலவசமாக கேட்டேன். //

பாலுக்குள்ளே வெண்ணையுண்டு
கடையத் தெரிந்தவனுக்கு அது இலவசம்
விறகுக்குள்ளே நெருப்பும் உண்டு
கடையத் தெரிந்தவனுக்கு அது இலவசம்
படுக்கைக்குள்ளே உறக்கம் உண்டு
தூங்கக் கொண்டவனுக்கு அது இலவசம்
உழைப்பிற்குள்ளே வெற்றி உண்டு
முனைந்தவனுக்கே அது இலவசம்

சிவமுருகன் said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி சிபி சார்.

சிவமுருகன் said...

இராகவன் சார்,

//பாலுக்குள்ளே வெண்ணையுண்டு
கடையத் தெரிந்தவனுக்கு அது இலவசம்
விறகுக்குள்ளே நெருப்பும் உண்டு
கடையத் தெரிந்தவனுக்கு அது இலவசம்
படுக்கைக்குள்ளே உறக்கம் உண்டு
தூங்கக் கொண்டவனுக்கு அது இலவசம்
உழைப்பிற்குள்ளே வெற்றி உண்டு
முனைந்தவனுக்கே அது இலவசம்
//

கடைந்தாலும், குடைந்தாலும், கொண்டாலும், முனைந்தாலும்
"இலவசம்" எப்படி சாத்தியம் அதற்க்கான ஒரு விலை ஆகி விடுகிறதே?

G.Ragavan said...

// கடைந்தாலும், குடைந்தாலும், கொண்டாலும், முனைந்தாலும்
"இலவசம்" எப்படி சாத்தியம் அதற்க்கான ஒரு விலை ஆகி விடுகிறதே? //

அதைத்தான் நானும் சொல்கிறேன் சிவமுருகன். இலவசமாய் எந்த இலவசமும் கிடைப்பதில்லை என்று. உட்பொருள் அதே!

சிவமுருகன் said...

//அதைத்தான் நானும் சொல்கிறேன் சிவமுருகன். இலவசமாய் எந்த இலவசமும் கிடைப்பதில்லை என்று. உட்பொருள் அதே! //

இலவசம் என்பதற்க்கு ஒரு புது விளக்கத்தை தந்து விட்டீர்கள் இராகவன் சார்.