
ஸ்ரீராம நவமி நாளை கொண்டாடுங்கள்
அவன் திருமணம் கோடி எழுதி
அருள் தேடுங்கள் - கடவுள்
மனிதனாகி மனிதனே கடவுளாகி
கடமைகள் ஆற்றுவதை
கண்ணெதிரே காட்ட வந்த (ஸ்ரீராம)
பாசத்திலே கொசல்யா
தசரதருக்கு கண்ணவன்
பரதன், லட்சுமணன், சத்ருக்னன்
மூவருக்கும் முன்னவன்
ஜனகனின் புதல்வியான
ஜானகிக்கு மன்னவன்
ஜெயபட்ச மைந்தனுக்கு தவநிலையைச் சொன்னவன் (ஸ்ரீராம)
கல்லை பெண்ணாக்கிய
காலவண்ணம் அவனது - சிவ
வில்லை இரண்டாக்கிய கைவண்ணம் அவனது
அண்ணனும் பார்த்தான்
அவளும் பார்த்தாள் - அப்பாறவை
பொருள் வண்ணம் யார் என்ன சொல்வது (ஸ்ரீராம)
மானாக வந்தவனின் மமதையை துளாக்கினான்
மருதியே தெய்வமாக மனிதனிலே போற்றினான்
சுக்ரீவனின் சொல்லை தன் வில்லால் நிறைவேற்றினான்
வீரன் பாராயண ராமாயணத்தை நாட்டினான் (ஸ்ரீராம)


பலரும் அறிந்த ராமரை பற்றிய ஒரு பாடலை படிக்க நேர்ந்தது
(ஒவ்வொரு அடி முடிவிலும் ராமஜெயம் என்று கூட்டிச் சொல்லவும்)
அன்பர்கள் இடரை அகற்றிவேண்டி அயோத்தியில் வந்தது
அசுரரை அழித்து அறத்தழித்தோங்க அமைதி அளித்தது
ஆதவன் மரபில் அழகிய உருவெடுத்து அவதரித்தது
ஆணும் கமழும் வேதமுமுனிவன் அருளைப் பெற்றது
இருள் வழிவான உலகையைக் கொண்டு மருள் ஒழித்தது
இருடியின் மகத்தை இலக்குவோடு இமைபோல் காத்தது
ஏசனை பெற்ற கொளதன் இல்லான் இடரை ஒழித்தது
ஏனோடு இந்தின் இமையவர் எவரும் எதம் நின்றது
உண்மையின் வழிவாம் ஜீவசரத்தை ஓர்வாய் என்று
உறுதியைக் கொடுத்து மறுதியைக் கெடுத்து
உலகத்தை காப்பது
ஊனமில் உடலும் உயரிய பொருளும் உடனே தருவது
உமையோடு இருக்கும் தேசம் உயர்வை அளிப்பது
என்றும் நமக்கு இன்பம் அளித்து இங்கே இருப்பது
எமக்கு இது சாது பிறக்கு இது தீது என்பது அற்று
ஏதுமற்று எங்கி நின்றோர் தமக்கு என்றும் தருவது
என் உருவெண்ட வளனையை எந்த இருக்களையில வைக்கத்து
ஜெபங்கள்களை அடிமையாகக் கொண்டஅனுபவன் உரைத்தது
ஜென்மக்கடவுளும் பங்கயத்தவனும் அமரும் உறைவது
ஒருவழி நில்லாது அலைபாயும் மனதை ஒரு
வழிப்படுத்தும்
ஒருவனும் யான் என்பதினை என்று உண்மை உணர்த்தும்
ஒங்காரப் பொருளே உண்மையின் வழிவாம் ஓர்வாய் என்பது
ஒளிவயத்தினிலும் காவியத்தினிலும் ஊக்கமளிப்பது
ஒளவையப்பொன்று அருள்கிறிக்கும் அறத்தை உரைப்பது
ஔடதம்போன்று படிப்போர்க்கு அனைத்தும் அளிப்பது

ராமன் பிறந்து...
-
ராமன் பிறந்தது நவமியிலே
நட்ட நடுகல் வேளையிலே
கண்ணன் பிறந்தது அஷ்டமியிலே
காரிருள் நடுநிசி வேளையிலே
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்
-
ராமன் பிறந்தது அரண்மனையில்
நன்றாய் பார்த்தனர் மக்களெல்லாம்
கண்ணன் பிறந்தது கடுஞ்சிறையில்
கண்டவர் தாயும் தந்தையுமே (ஸ்ரீராம்) -
சூரிய குலத்தில் ராமனுமே
தோன்றினன் பெருமை தந்திடவே
சந்திர குலத்தில் கண்ணனுமே
வளர்ந்தான் பெருமை சேர்த்திடவே (ஸ்ரீராம்) -
மனிதர் போல இவ்வுலகில்
வாழ்ந்து காட்டியவன் ராமனுமே
மாயா ஜாலம் பல புரிந்து
வாழ்ந்தவன் நீல கண்ணனுமே (ஸ்ரீராம்) -
ராமன் பெற்ற குணங்களெல்லாம்
நாமும் பெற்று மகிழ்ந்திடவே
கண்ணன் கதையில் சூழியதைக்
கருத்தினில் கொண்டு உயர்ந்திடுவோம் (ஸ்ரீராம்) -
வாழ்ந்த காட்டிய ராமனையும்
வழியை காட்டிய கண்ணனையும்
வாழ்வில் என்றும் மறவேமே
மறவேமே மறவேமே மறவேமே
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்


