ஸுதர்ஸநம் பாஸ்கர கோடி துல்யம்
ஸுரத் விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ:
சக்ரம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே
ஆயிரமாயிரம் ஆதவன் கதிரென
சுதர்சனம் சொலித்திடும் தீச்சுடராய் - தேவர்தம்
பகைவரை அழித்து நிற்கும் பெருமான்
கைச்சக்க்ரத்தைச் சரணடைவோம்
விஷ்ணோர் முகோத்தா நில பூரிதஸ்ய
யஸ்ய த்வநிர் தானவ தர்ப்பஹந்தா:
தம் பாஞ்ச ஜன்யம் சசி கோடி சுப்ரம்
சங்கம் ஸதா(அ)ஹம் ச்ரணம் ப்ரபத்யே
கோடி மதியின் வெள்ளொளியாய் – பெருமான்
கோவைச் செவ்வாய் காற்றொலியால்
தானவர் தன்குலம் கலங்கடிக்கும் – சங்கு
பாஞ்சஜன்யத்தைச் சரணடைவோம்
ஹிரண்மயீம் மேருஸமான ஸாரம்
கௌமோதகீம் தைத்ய குலைக ஹந்த்ரீம்
வைகுண்ட வாமாக்ர கரா பிம்ருஷ்டாம்
கதாம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே
பொன்னென மின்னும் மேருவைப் போல் - கெட்ட
தைத்யர் தன் குலம் அழித்து நின்று
வைகுந்த வாசனின் கரந்தவழும் – கதை
கௌமோதகீயைச் சரணடைவோம்
ரக்ஷோ ஸுராணாம் கடிநோக்ர கண்ட
சேத க்ஷர சோணித திக்த தாராம்
தம் நந்தகம் நாம ஹரே ப்ரதீப்தம்
கட்கம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே
தேவர்தம் குடியை காத்திடவே – கொடிய
ராக்கதர் தந்தலை கொய்தவர்தம்
உதிரத்தில் குளித்த செவ்வாளாம்
நந்தகம் தன்னை சரணடைவோம்
யஜ்ஜ்யாநி நாத ஸ்ரவணாத் ஸுராணாம்
சேதாம்ஸி நிர்முக்த பயாநி ஸத்ய:
பவந்தி தைத்யாஸநி பாண வர்ஷ
ஸார்ங்கம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே
மின்னலாய் பயஇருள் போக்கி நின்று – பகைவர்
பின்னமாய் இடிந்திட நாணொலிக்க
சாரமாய் அம்பு மாரியை பொழிந்திடும்
சாரங்கத்தை என்றும் சரணடைவோம்
இமம் ஹரே பஞ்ச மஹாயுதா நாம்
ஸ்தவம் படேத் யோ (அ)நுதிநம் ப்ரபாதே
ஸமஸ்த து:காநி பயாநிஸத்ய:
பாபாநி நஸ்யந்தி ஸுகாநி ஸந்தி
காலையில் அனுதினம் கருத்துடனே – ஆயுத
மாலையிதை ஓதி நின்றால்
துன்பங்கள் அனைத்தும் நீங்கியிங்கு – நித்ய
தூயன் அருளில் துய்த்திடலாம்.
வநேரணே சத்ரு ஜலாக்நி மத்யே
யத்ருச்யா பத்ஸு மஹா பயேஸு
இதம் படன் ஸ்தோத்ர நா குலாத்மா
ஸுகி பவேத் தத்க்ருத ஸர்வ ரக்ஷ:
போரினில் எதிரிகள் சூழ்ந்திடினும் - கெட்ட
பேரிடர் பொழுதின் பயங்களிலும்
தோத்திரம் இதனை ஓதி நின்றால் - சுகம்
மாத்திரம் கிட்டிங்கு வாழ்ந்திடலாம்.
இப்படி ஆயுத பாமாலை இருப்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.
கடவுள்களுக்கு ஏன் ஆயுதங்கள் என்று பல நிலைகளில், பல பேருக்கு சந்தேகங்கள் எழுவதுண்டு.
நான் பங்கெடுத்த ஒரு அலுவலக பயிற்ச்சியின் போது, பயிற்ச்சியின் இடையில் கடவுள்களின்
ஆயுதங்களுக்கும், ஆளுமைத்திறங்களின் பிரிவில் இருக்கும் சிலவற்றிக்கு உள்ள ஒற்றுமைகளை
காட்டினார் பேச்சாளர். எல்லா ஆயுதங்களையும் சற்றே உற்று நோக்கினால் வேற்றுமையில் ஒரு
ஒற்றுமை தோன்றும், எடுத்து காட்டாக கடவுளர் கையில் ஆயுதங்கள், 2,4,6,8,10 … என, இரண்டும்
அதன் மடங்காகவும் தான் வைத்திருப்பார், ஒன்று பிரிக்கும் விதமாகவும் மற்றொன்று சேர்க்கும்
விதமாக இருக்கும்.
சங்கு - சக்கரம்
வில் - அம்பு
கதை – தாமரை அல்லது அன்னகின்னம்
அங்குசம் அல்லது கோடாலி - பாசம்
அபய அல்லது வரத ஹஸ்தம் – ஈட்டி
வாள் – கேடையம்
கும்பம் – தாமரை அல்லது அகப்பை
இப்படியாக ஆயுதங்கள் இரட்டையாகவும், அதை தாங்கிய கரங்கள் சற்றே தளர்வாக பிடிக்கப்பட்டும் இருப்பதை கவனிக்கலாம். இப்படியான ஆயுதங்கள் எதை சொல்கின்றன? எதை உணர்த்துகின்றன? எதை கற்பிக்கின்றன? என்று சிந்திக்க வைத்தார் பயிற்ச்சியாளர்.
பார்கடலில் இருந்து
தன்வந்திரி பகவான் அமிர்த கலசத்துடன் வெளிப்படுகிறார், அவரை தேவர்களும் ரிஷிமுனிகளும்
பலவாறு போற்றுகின்றனர். நாரயணனே தன்வந்திரியாக வருகின்றார் என்றும், எல்லா துன்பங்களையும்
போக்குகிறார் என்றும் புகழ்கின்றனர். தான் வைத்திருக்கும் அத்தனை ஆயுதங்களையும் அமிர்தமாக்கி
வந்துள்ளார் என்று போற்றுகிறார்கள். எனில் அத்தகைய ஆயுதங்கள் நேரம் வரும் போது அதுவே
அமிர்தமாகி விடுகின்றது.
மேலும் சில சிந்தனைகள்
நினைவில் நின்றன, நித்ய பூஜைகளின் போது அபிஷேகம், ஆராதனை, சந்தனம், மஞ்சள் மற்றும்
அட்சதை என்று பல மங்கள சமாச்சாரங்கள் அதிகமாகவே இந்துமதத்தில் உண்டு.
முதலில் அபிஷேகத்திற்க்கு வருவோம்!
முதலில் அபிஷேகத்திற்க்கு வருவோம்!
அபிஷேகம் – அபிஷேகம் என்றவுடன் அனைவருக்கும் அபிஷேக பிரியரான
சிவபெருமான் தான் ஞாபகத்திற்க்கு வருவார், பன்னீர், பால், தயிர், இளநீர், பஞ்சாமிருதம்,
தேன், சந்தனம் மற்றும் மஞ்சள் கரைசல், தண்ணீர் என பல அபிஷேகங்கள் சிவபெருமானுக்கு செய்வது
உங்கள் ஞாபகத்திற்க்கு வரலாம். இது எப்படி ஆளுமை திறனில் ஒத்துப் போகும் என்று நினைக்கலார்ம்,
நாம் ஒவ்வொரு நாளும் பல விதமான சிந்தனைகளை கடந்து வருகிறோம், நேர்மறையான – எதிர்மறையான
சிந்தனைகளை கடக்கிறோம், முதலில் அதை எல்லாம் ஒன்றுமற்ற ஒரு பொருளாக ஆக்கினால் தான்
நற்சிந்தனைகளை எளிதில் கொண்டு வர இயலும், அதையே இந்த அபிஷேகத்திற்கான விளக்கம் என்றார்
(அட சரிதான்). (Orientation).
அலங்காரம் – அலங்காரம் என்றவுடன் பெருமாள் மகாவிஷ்ணுவும், முருகனும் உங்கள் நினைவிற்க்கு வருவர், பல அவதார அலங்காரங்கள், பல படை வீடு அலங்காரங்கள் என்றும், பட்டு, பீதாம்பரன், விபூதி, சந்தனம், குங்குமம், திருமன், பூ, பழம், மஞ்சள் மற்றும் ஆபரணங்கள் போன்ற நற்பொருட்களும் அலங்காரத்திற்க்கு வக்காலத்து வாங்க தங்களின் நினைவிற்க்கு வரலாம், அலங்காரம் என்பது ஒவ்வொரு நாளும் மாறாது நடைபெற கூடியது, இறைவனாக எண்ணி வணங்கும் உருவிற்க்கு மந்திரம் ஓதி நித்தியமாக நடக்க ஏற்பாடுகள் செய்து மறைபொருளாக இன்றைய தலைமுறைக்கு காட்டியுள்ள ஆளுமை திறன் ஒன்றுமற்ற ஒரு பொருளின் மீது நற்சிந்தனைகளை - செயல்களை பழக்கி விட்டால் அது நல்ல படியாகவே முடியும் இதுவே அலங்காரத்தின் விளக்கம். (அப்படிதானே) (Presentation)
ஆயுதங்கள் – சரி தலைப்பிற்க்கு வருவோம்
ஆயுதங்கள் எல்லாம் ஒருசில உட்பொருளைகளை நிலை நிறுத்துகின்றன
சங்கு – சக்கரம்


சங்கு என்பது ஒருவர்க்கு ஒருவர் செய்துகொள்ளும் சங்கேதங்களாக – தொலைதொடர்புகளாக இருந்துள்ளது, அவ்வாறு சங்கேதங்கள் மறுபடி மறுபடி ஆய்வு செய்யவைக்க வேண்டும் என்பதை சங்கின் ஜோடியான சக்கரம் உணர்த்துகிறது. (Communication)
சக்கரம் என்பது சுழன்று கொண்டிருகக் கூடியது அவ்வாறாக நாமும் நம் செயல்களில் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க வேண்டும் என்பது நாம் கற்கவேண்டிய பாடமாம். (Re-Visiting goal)
வில் – அம்பு
அம்பானது எவ்வளவு தான் கூர்மையானதாக் இருந்தாலும் அது தன் இலக்கை அடைய வில் என்ற சார்பு ஆயுதம் தேவைப்படுகிறது. அதே போல் எப்போதும் ஒரு சிறந்த இணை தேடி அடையவேண்டியதன் முக்கியத்துவத்தை காட்டுகின்றது. (Getting perfect match)
கோடலி என்பது - ஒரு பெரும் செயலை பல பிரிவாக கொண்டு செயல்படவேண்டி
சிறு சிறு பிரிவாக பிரிக்க தயங்க கூடாது என்று சொல்கிறது. (Spliting the Mass-Task
in to tasks)
அங்குசம் – அங்குசமானது ஒரு செயல் தன் இலக்கை மீறி செயல் படும் போது அதை அதன் இலக்கிற்க்கு நிலை நிறுத்துவதை குறிக்கிறது. (Control)
பாசம் (கயிறு) – கயிறானது எவ்வாறு வெட்டுப்பட்ட பொருட்களை இணைக்க பயன்படுகிறதோ அவ்வாறு வெட்டப்பட்ட செயல்களை இணைவேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. (Merging the tasks)
அபய ஹஸ்தம்
எதேனும் தவறு நேரும் சமயம் நாமாக சென்று அதை வெளிபடுத்தி
அதற்க்கான தீர்வை – அறிவுரையை எதிர்நோக்கும் சம்பவத்தை குறிப்பது. (Seeking for
Approval/Advice)
வரத ஹஸ்தம்
எல்லாம் நலமாகும் தருணத்தில் அதை பரிசீலித்து அதற்க்கான நல்வினையை
வரமாக வழங்குவது. (Appraising – rewarding)
நலமாகத பட்சத்தில் கொடுக்கபடும் தண்டனையை வெளிபடுத்தும் பொருளாக
காட்டுகிறது ஈட்டி. (Demoting)
வாள் – கேடையம்
வாள் கேடையம் இரண்டில் ஒன்று தாக்குவதற்க்கும் மற்றொன்று
தடுப்பதற்க்கும் பயன்படுகிறது. (Attack & Defence)
கதை – தண்டனையையும், தாமரை அன்னகின்னம் – வரத்தையும் காட்டுகிறது.
ஒவ்வொரு செயல்களின் முடிவில் ஒரு நன்மையோ தீமையோ விளையும் என்பதன் வெளிபாடு தான் கதை
– தாமரை அல்லது அன்னகின்னம் தெரிவிக்கிறது.
சரி எல்லாம் சரியாக இருந்து விட்டால் கிடைப்பது யாது என சிலருக்கு, குறிப்பாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் கேள்வியாக இருக்கும். அதையும் பேச்சாளர் வெளிபட்டுத்தினார் அது தான் இலக்கு. (AIM for the task)
ஆக எம்மை இமைபொழுதும் நீங்காது காக்கும் ஆயுதங்களே – எண்ணங்களே
– உம்மை போற்றுதலில் எம்மையே எண்ணுகிறோம் என்பது உணர்ந்தால் அதுவே திண்ணம்.
வணக்கங்களுடன்
சிவமுருகன்