//என்ன சொல்றீங்க.... அஸ்வமேத யாகமா? நிஜமா? நிஜ அஸ்வமா?
அப்பாஅம்மாட்டே கேட்டு கொஞ்சம் விவரம் சொல்லுங்களேன்.துளசி அம்மா அவர்கள் தமது வரலக்ஷ்மி விரத பதிவில் அஸ்வமேத யாக பற்றி கேட்டிருந்தார். அதைபற்றி ஒரு பின்னூட்டமாக இடுவதை விட ஒரு பதிவாக இடலாமென இட்டுள்ளேன்.
அஸ்வம் என்றால் – குதிரை என்ற பொருளும், வீரியம் என்ற பொருளும் உள்ளன.
இராமாயணத்தில் அன்று நடந்தது (குதிரை) அஸ்வமேத யாகம், குதிரை சென்ற இடமெல்லாம் இறைவன் இராமரது ஆட்சிக்குட்பட்டதானது.
இப்போது நடந்து வருவது (வீரியம்) அஸ்வமேத யாகம், வீரியம் சென்ற இடமெல்லாம் காயத்ரி மஹா மந்திரத்தின் ஆட்சி பெற்ற இடமாகும்.
இனி அவர்களது பரிவாரை பற்றியும் அவர்களைபற்றியும்.
ஹரிதுவாரில் இருக்கும் காயத்ரி பரிவார், சாந்தி குஞ்ச் -லிருந்து கடந்த டிசம்பரில் மதுரையில் ராஜா இஞ்ஜியரிங் கல்லூரியில் மாபெரும் யாகம் நடத்தினர்.
72 ஹோம குண்டங்களை அமைத்து, 100க்கும் மேலான துறவிகள், 2-3 லக்ஷத்திற்க்கும் அதிகமானவர்கள், 20க்கும் அதிகமான வெளிநாடுகளிலிருந்தும், எல்லா இந்திய மாநிலங்களிலுமிருந்தும் கலந்து கொண்டு சிறப்படைந்தனர். நானும் இந்த யாகத்திற்க்காக தில்லியிலிருந்து மதுரை சென்றேன், நான் சென்ற வண்டியிலேயே வழியிலிருக்கும் மாநிலங்களான மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரம், ஆந்திர மாநிலங்களிலிருந்து வந்துகொண்டிருந்தனர்.
முதல் முறையாக தமிழகத்தில் நடந்த ஒரு பிரம்மான்டமான யாகமிது என்று எல்லா பத்திரிக்கைகளும் புகழ்ந்து தள்ளியது.
அதில் தீவிரமாக களத்தில் இறங்கி பணிசெய்தவர்கள் பலர் அதில் என்னுடைய பெற்றோரும் ஆவர்.
முன்னதாக கடந்த 2005ல் ஜூலை மாதம் யாகக்கலசம் புறப்பட்டு சென்னை வழியாக மதுரை சென்றடைந்தது. கலசம் சென்ற இடங்களெல்லாம் விழாகோலம் பூண்டிருந்தது. 100 நாட்களுக்கும் மேலாக ஹோம கலசம் தமிழக மாவட்டஙளில் சுற்றிவந்தது.
கடைசியாக கடந்த டிசம்பர் 29,30,31 மற்றும் ஜனவரி 1-ல் உலகமே எதிர் நோக்கிய யாகவேள்வி, எமது ஆச்சாரியர் பண்டிட் ஸ்ரீ ராம் ஷர்மா மற்றும் மாதா “பகவதி தேவி” அவர்கள் திவ்ய அருளாலும் டாக்டர் “ஸ்ரீ பிரணவ் பாண்டியா”, மற்றும் அவர்களது துணைவியர் ஸ்ரீமதி ஷைபலா பாண்டியா அவர்களின் முன்னிலையிலும், என்னைபோன்ற எளியவர்களுக்கும் இப்பாக்கியம் கிட்டியது.
சாதிமத பேதமில்லாமல் எல்லாம் மதத்தவரும், இனத்தவரும் கலந்து கொண்டு சிறப்படைந்த இந்த யாகம் இன்னும் பல இடங்களில் நடத்த வேண்டும் என்ற மதுரை அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இன்றும் நடத்தி வருகின்றனர். அதில் தீவிரமாக இருப்பவர்கள் என் பெற்றோரும், அவர்கள் இணைந்திருக்கும் காயத்ரி பிரசார சமீதியும், இவ்வியக்கம் மதுரையிலும் பல மாவட்டங்களிலும் சிறந்த பங்காற்றி வருகிறது.
சுனாமியின் போதும் மற்ற சில இயற்க்கை சீற்றங்களின் போதும் இவர்கள் அந்த பகுதிகளுக்கு சென்று மக்கள் சேவை செய்ததும், பின் அவ்விடங்களில் காயத்ரி மஹாமந்திர ஜபம் செய்ததும் குறிப்பிடத்தக்கது
எண்ணங்களால் மேன்பட தரும் இவர்களது பாடங்கள் பல பேர் பெற்று பயனடைந்துள்ளனர். சாந்தி குஞ்சில் ஒரு பள்ளியும் ஒரு பல்கலைகழகமும் இயக்கி வருகின்றனர். இவ்வியக்கங்களை பற்றி மேலும் விரிவாக இங்கே.
மதுரை வந்த யாகக்கலசத்திற்க்கு தெற்க்கு கிருஷ்ணன் கோவிலில் நடந்த முதல் மரியாதை. கலசத்தை சுமந்துள்ளவர் என்னுடைய அம்மா திருமதி. உமாமஹேஸ்வரி. அருகில் மஞ்சளாடையில் நிற்பவர் என்னுடைய தந்தை திரு. கோபால் ராம். மேலும் சில படங்கள் தினமலரிலிருந்து.
Saturday, August 05, 2006
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அஸ்வமேத யாகம் என்பது குதிரையை வைத்து செய்யப்படுவது என்று நினைத்திருந்தேன். ராமாயணத்தில் பாலகாண்டத்திலும் பிறகு உத்தரகாண்டத்திலும் இந்த யாகம் நடந்த விவரங்கள் அழகாக விளக்கப்பட்டு படித்த அனுபவம் உண்டு.
தங்கள் படங்களையும், பதிவையையும் கண்டு எனக்கு வியப்பும், ஆர்வமும் உண்டாகிறது. இந்த யாகம் எம்மாதிரி நடந்தது? இதை எந்த விதிப்படி நடத்தினார்கள்? இதற்கான வழிமுறைகளை யார் அமைத்துக்கொடுத்தார்கள்? இவை என் மனதில் தோன்றும் ஐயங்கள். தாங்கள் விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
நன்றி
ஜயராமன் சார்,
//அஸ்வமேத யாகம் என்பது குதிரையை வைத்து செய்யப்படுவது என்று நினைத்திருந்தேன்.//
அஸ்வமேதம் என்றாலே அது குதிரையை கட்டுப்படுத்துதல் என்றுதான் பொருள், ஆனால் அது இங்கே வீரியத்தை கட்டுபடுத்தி பெருக்குவது என்ற பொருளில் இருந்து வருகிறது.
//ராமாயணத்தில் பாலகாண்டத்திலும் பிறகு உத்தரகாண்டத்திலும் இந்த யாகம் நடந்த விவரங்கள் அழகாக விளக்கப்பட்டு படித்த அனுபவம் உண்டு.\\
மன்னராக இருந்து செய்தது அந்த அஸ்வ மெத யாகம்.
//தங்கள் படங்களையும், பதிவையையும் கண்டு எனக்கு வியப்பும், ஆர்வமும் உண்டாகிறது. //
இதை கேள்விபட்ட போது எனக்கும் இப்படிதான் இருந்தது.
//இந்த யாகம் எம்மாதிரி நடந்தது? இதை எந்த விதிப்படி நடத்தினார்கள்? //
காயத்ரி மஹா யாகம் செய்வார்களே அதே போல் நடந்தது.
//இதற்கான வழிமுறைகளை யார் அமைத்துக்கொடுத்தார்கள்? //
கயத்ரி பரிவார் அமைப்பை சேர்ந்தவர்கள் அமைத்துக்கொடுத்தார்கள்.
கடந்த 2002-ல் ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்றதது, இனி எதிர்காலத்தில் 2010-ல் பங்களூரில் நடக்க உள்ளது.
கிருபாணந்த வாரியார் திருச்சி நேசனல் கல்லூரி பள்ளியிலும் இப்படித்தான் ஒன்று நடத்தினார்என நினைக்கிறேன். அது அசுவமேத யாகம் அல்ல உலக சேமத்திற்காக நடைபெற்றது
அசுவ மேத யாகம் என்றால் குதிரைய அனுப்பி அதை பிடித்து கட்டுபவன் மீது மட்டும் போர் தொடுப்பது. கடைசியா அந்த குதிரை வைத்து வெட்டி யாகம் நடத்துவார்களோ? தெரிய வில்லையே.
சிவமுருகன் ஐயா,
தங்கள் மேலான விளக்கத்துக்கு நன்றி...
///
ஆனால் அது இங்கே வீரியத்தை கட்டுபடுத்தி பெருக்குவது என்ற பொருளில் இருந்து வருகிறது. ///
இதற்கு ஏதாவது ஆதாரம் சான்று மத நூல்களில் காட்ட வேண்டுகிறேன்...
///
//இந்த யாகம் எம்மாதிரி நடந்தது? இதை எந்த விதிப்படி நடத்தினார்கள்? //
காயத்ரி மஹா யாகம் செய்வார்களே அதே போல் நடந்தது.
////
நான் எதிர்பார்த்தது மத நூல்களில் கூறப்பட்ட இல்லை பின்பற்றப்பட்ட ஏதாவது விதிகள். மன்னிக்கவும். தாங்கள் கூறியது அல்ல. காயத்ரி வேள்வி மாதிரி அஸ்வமேத யாகம் எவ்வாறு செய்ய இயலும். இவ்வாறு முன் எப்போதாவது செய்திருக்கிறார்களா? இதற்கு ஏதாவது மத நூல்களில் கூறப்பட்டுள்ளதா? இல்லை இது காயத்தரி அமைப்பினரின் விதிமுறைகளா?
===========
ஆர்வத்தில் கேட்டேன். பதில் கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை...
நன்றி
சிவமுருகன்,
ஹப்பா.......... மனசுக்கு நிம்மதி கொடுத்தீங்க. 'நிஜ அஸ்வம்'ன்னு நினைச்சு அப்படியே
ஆடிப் போயிட்டேன்.
கலசத்தைச் சுமந்து வரும் அம்மாவையும், அருகில் அப்பாவையும் காமிச்சதுக்கு நன்றி.
காயத்ரி பரிவார் அமைப்பைப் பத்தி இப்பதான் முதல்முறையா கேள்விப்படுகிறேன்.
நம்ம 'யானை' படத்துக்கும் நன்றிங்க.
நல்ல பதிவு.
Post a Comment