அச்சமயத்தில் மதுரை அரசமரமும் இதில் ஒன்றாகி விடுமோ என்று பயந்த பல பக்தர்கள் அவ்வாலயம் காக்க வேண்டும் என்று அவனையே வணங்கி வந்தனர். தற்போது காமராஜர் சாலையில் அரசமரம் பிள்ளையார் கோவில் தவிர மற்ற சிறிய, பெரிய கோவில்களனைத்தும் நடவடிக்கை மூலம் மறை(ற)ந்து போயின.
பல பள்ளி மாணவர்களின் இஷ்ட தெய்வமான இந்த விநாயகரின் ஆலயத்தில் சிவராத்திரி சமயத்தில் நடக்கும் கொண்டாட்டங்கள் மிகவும் பிரபலமானவை. திருமுருக. கிருபானந்தவாரியர் அவர்களின் சொற்பொழிவுகள் இவ்வாலயத்தில் நடைபெற்றுள்ளது. மேலும் டி.எம்.எஸ். போன்ற புகழ் பெற்ற பாடகர்களும், தமிழ், சௌராஷ்டிரா நாடகங்களும், அரங்கேறி வந்துள்ளது. பல கச்சேரிகளும், பட்டிமன்றங்களும், பல இசை வல்லுனர்கள் இங்கே வந்து இசைத்து அரசமரம் கணேச பெருமானின் அருள் பெற்றுள்ளனர், மேலும் திரு. தா.கு.சுப்ரமணியன், திரு. ராஜா போன்ற பேச்சாளர்கள் பலவிதமான தலைப்புகளில் எண்ணற்ற சொற்பொழிகளை ஆற்றியுள்ளனர். ஏ.ஜி.எஸ். ராம்பாபு போன்ற பல அரசியல் பிரபலங்கள் பலரும் இக்கோவிலில் வந்து வணங்கி வழிபட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி நாளில் இங்கே மண்ணால் செய்து வணங்கப்படும் விநாயகர் இராமேஸ்வரம் கடலில் சென்று கரைக்கப்படுவது மேலும் ஒரு சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.
அப்பேற்பட்ட மிகவும் வலிமைவாய்ந்த, புகழ்பெற்ற இக்கோவிலின் படம் சில நட்களுக்கு முன் இணையத்தில் கிடைத்தது. ஒரு பொங்கல் பண்டிகையின் போது எடுக்கப்பட்ட படம் என்று அதில் குறிப்பிருந்தது.
சாதிமத பேதமில்லாமல் பல சமூக மக்கள் சென்று வழிபடும் மற்றுமொரு கோவில். மதுரை பேச்சியம்மன் கோவில் பல வேற்றுமதத்தவர்களும் இங்கே வந்து அம்மனை வேண்டி தொட்டில் கட்டுகின்றனர்.
இங்கே கட்டப்பட்ட தொட்டில் வீட்டிலும் விரைவில் ஆடுகிறது என்று பலர் சொல்ல கேட்டுள்ளேன். மேலும் ஆண்குழந்தை வரம் வேண்டுவது இக்கோவிலின் முக்கியம்சமாகும். ஆடி மாதம் மற்றும் மார்கழி மாதத்தில் செவ்வாய், வெள்ளி என்றில்லாமல் எல்லா நாட்களிலும் இக்கோவிலில் கூட்டம் கூடுகிறது. நானும் கடந்த 1997-98ல் ஒவ்வொரு வாரமும் தவறாமல் இக்கோவிலுக்கு சென்று வழிப்பட்டுள்ளேன்.
நாயக மன்னர் காலத்தில் பல கோவில்கள் உருவாகப்பட்டன, இன்று அவர்களது பெயர்களை சொல்லும் சான்றுகளாக நிமிர்ந்து நிற்க்கின்றன. அப்பேற்பட்ட கோவில்களுள் ஒன்று ஹயகிரீவர் கோவில். மதுரை கூடலழகர் கோவிலருகில் இருக்கும் இக்கோவில் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது போல் இக்கோவில் சிறிதானாலும் இதன் கீர்த்தி பெரிது. மஹாவிஷ்ணுவின் முதல் வடிவம், முதல் அவதாரமாக கருதப்படும் ஹயகிரீவர் தான் திருபதி ஏழுமலையானுக்கு அங்கே இடமளித்தவர் என்று ஸ்ரீநிவாச ஸ்தல புராணம் சொல்கிறது மேலும் அங்கே முதலில் அவருக்குதான் பூஜை வகைகள் செய்யப்படுகின்றன.
மதுரை தெப்பக்குளம். கடந்த 1990-1995 தெப்பகுளம் பகுதியில் இருக்கும் தியாகராஜ நன்முறை மேல்நிலை பள்ளியில் உயர்-பள்ளி படிப்பை படித்து வந்த போது காலையில் நடைபெறும் தெப்போற்ச்சவம் கண்டாலும் இரவில் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பகுளத்தையும், நடைபெறும் தெப்போற்ச்சவத்தையும் காண்பதுண்டு. இப்படத்தை கண்டபோது இது போன்ற பழைய நினைவுகள் கண்கள் முன் நிழலாடின.
அடுத்த பதிவு, மதுரையின் மூன்று படங்கள்.
ஒன்று: நான்கு வெளி வீதிகளை எல்லைகளாக கொண்ட செயற்க்கை கோள் படம்.
மற்றொன்று: 1794ல் வடக்கு பகுதியிலிருந்து தெற்க்கு நோக்கி பார்த்து வரையப்பட்ட ஒரு படம்.
மூன்றாவது: அதேபோல் 1858ல் வரையப்பட்ட மற்றுமொரு படம்.
15 comments:
Thank you Mouls.
இந்த பிள்ளையார் பால் குடித்தாரா?
நல்ல படங்கள். கோயில் நகரம் என்று மதுரைக்குத்தான் பெயர்.
சிவமுருகன்,
அந்த மருதநாயகம் கண்டுக்காம... நீங்க எழுதுங்க...அந்த ஆர்கைவ் படங்களை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
சிவமுருகன்! உங்கள் படங்களை நானும் இரசித்தேன்
நான் ஏதாச்சும் தவறாக கேட்டுவிட்டேனா? இந்த வஜ்ரா ஏன் குதிக்கிறார்.
நாட்டில் உள்ள பிள்ளையார்கள் எல்லோரும் பால் குடித்ததாக செய்தி வந்தது. அதான் இவரும் குடித்தாரா என்று கேட்டேன். வஜ்ரா என்ன மிரண்டு போய் இருக்கிறாரா? கண்டதெல்லாம் அவருக்கு பேயாக தெரிகிறது.
வஜ்ரா சங்கர்,
உங்க வீட்டையும், எங்க வீட்டையும் செயற்க்கைகோள் படத்தில் காண்டுபிடித்து விட்டேன், நீங்க கண்டு பிடிங்க பார்க்கலாம்.
இராகவன் சார்,
எல்லா மாவட்டங்களும் கோவில் நகரமாக தான் உள்ளன.
இந்த பிள்ளையார் பால் குடித்தாரா?
அத அந்த பிள்ளையார்கிட்டே தான் கேட்கணும், நான் வெளியூர் சென்றிருந்தேன்.
ஹி... ஹி...
//
இந்த பிள்ளையார் பால் குடித்தாரா?
//
///
அத அந்த பிள்ளையார்கிட்டே தான் கேட்கணும், நான் வெளியூர் சென்றிருந்தேன்.
ஹி... ஹி...
///
சிவமுருகன்! உங்கள் நகைச்சுவை உணர்வுக்கு வாழ்த்துக்கள். இதற்கு போய் ஏன் வஜ்ரா என் மீது பாய்கிறார். பாவம் அவருக்கு பால் கிடைக்கவில்லையோ :-)
மருதநாயகம்,
//சிவமுருகன்! உங்கள் நகைச்சுவை உணர்வுக்கு வாழ்த்துக்கள். //
நன்றி
//இதற்கு போய் ஏன் வஜ்ரா என் மீது பாய்கிறார். பாவம் அவருக்கு பால் கிடைக்கவில்லையோ :-) //
அதையும் அவர்கிட்ட தான் கேட்கணும். :-).
//சிவமுருகன்! உங்கள் படங்களை நானும் இரசித்தேன்//
நன்றி.
//நான் ஏதாச்சும் தவறாக கேட்டுவிட்டேனா? இந்த வஜ்ரா ஏன் குதிக்கிறார்.//
தப்பேயில்லை.
//நாட்டில் உள்ள பிள்ளையார்கள் எல்லோரும் பால் குடித்ததாக செய்தி வந்தது. அதான் இவரும் குடித்தாரா என்று கேட்டேன். வஜ்ரா என்ன மிரண்டு போய் இருக்கிறாரா? கண்டதெல்லாம் அவருக்கு பேயாக தெரிகிறது.//
மண்ணிக்கனும் கொஞ்சம் மற்றியுள்ளேன். தருமி சார் இத பத்தி விளாவெரியா ஒரு பதி போட்டிருக்கார், பாருங்க.
மருத(நாயகம்) அண்ணாச்சி ஏன் சண்டைக்கு வர்ரீங்க?
ஏதோ உங்களுக்குள்ள பெரிய பின்னூட்ட உறவு இருக்கும் போல. சரிங்க விடுங்க, எதையும் நடு நிலையோட பார்த்தா யாருக்கும் சலாம் போட தேவையில்லை அது தான் என்னுடைய பாலிசி.
திணேஷ் பாபு,
தாராளமாக எடுத்து கொள்ளுங்கள், பிருந்தா வனமும் நந்த குமாரனும் யாவருக்கும் சொந்தம் தான், இவரும் அவர் மருகன் தானே?
அருமையான படங்கள் சிவமுருகன்.
நன்றி அண்ணா.
Post a Comment