Monday, November 15, 2010

என்னவள்! எனை ஆளும் கோள்

என்னவளே!

அறிவாக பட்ஜட் போடுகையில் நீ சூரியன்,
அழகாக உன்னை செதுக்குவதில் நீ திங்கள்,
ஆலோசனை வழங்குவதிலும் ஆளுமையிலும் நீ செவ்வாய்,
அலுவலக் சிக்கலை தீர்ப்பதில் நீ புதன்,
என்றும் என் ஆசான் ஆவதில் நீ குரு,
அன்பை அள்ளி அள்ளி தருவதுலும், அதிர்ஷ்டம் ஆவதிலும் நீ வெள்ளி,
என்றும் காரியங்களை சரியாக செய்ய மிரட்டுவதில் நீ மந்தன்,
செய்வதை அற்பனிப்பாக, செவையாக இருப்பதில் நீ ராகு,
உன்னை மறைத்து என்னை முன்னிலை படுத்துவதில் நீ கேது

No comments: